முகப்பு | தொடக்கம் |
மண்டு அமர் அட்ட |
213 |
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், |
|
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! |
|
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, |
|
நின்தலை வந்த இருவரை நினைப்பின், |
|
5 |
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், |
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; |
|
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு |
|
அனையை அல்லை; அடு மான் தோன்றல்! |
|
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ |
|
10 |
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் |
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: |
|
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் |
|
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! |
|
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த |
|
15 |
எண் இல் காட்சி இளையோர் தோற்பின், |
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? |
|
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், |
|
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; |
|
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து |
|
20 |
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு |
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது |
|
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர் |
|
அரும் பெறல் உலகத்து ஆன்றவர் |
|
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
|