முகப்பு | தொடக்கம் |
மன்னா உலகத்து மன்னுதல் |
165 |
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் |
|
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; |
|
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், |
|
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், |
|
5 |
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், |
|
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் |
|
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் |
|
பாடி நின்றனெனாக, 'கொன்னே |
|
10 |
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என |
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, |
|
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, |
|
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; |
|
ஆடு மலி உவகையொடு வருவல், |
|
15 |
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|