முகப்பு | தொடக்கம் |
மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|