முகப்பு | தொடக்கம் |
முள் கால் காரை |
258 |
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் |
|
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் |
|
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, |
|
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த |
|
5 |
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி, |
புலம் புக்கனனே, புல் அணல் காளை; |
|
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை |
|
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் |
|
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி; |
|
10 |
ஆ தரக் கழுமிய துகளன், |
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................உலோச்சனார் பாடியது.
|