முகப்பு | தொடக்கம் |
முந்நீர் நாப்பண் திமில் |
60 |
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, |
|
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
உச்சி நின்ற உவவு மதி கண்டு, |
|
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, |
|
5 |
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, |
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் |
|
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் |
|
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் |
|
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், |
|
10 |
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், |
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் |
|
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? |
|
திணை அது; துறை குடை மங்கலம்.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|