முகப்பு | தொடக்கம் |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|