முகப்பு | தொடக்கம் |
'யாண்டு பல ஆக' |
191 |
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் |
|
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின், |
|
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்; |
|
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் |
|
5 |
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை |
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் |
|
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
|