முகப்பு | தொடக்கம் |
யானே பெறுக, அவன் தாள் நிழல் |
379 |
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; |
|
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், |
|
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, |
|
5 |
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் |
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் |
|
வில்லியாதன் கிணையேம்; பெரும! |
|
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் |
|
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, |
|
10 |
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, |
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, |
|
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது, |
|
விண் தோய் தலைய குன்றம் பின்பட, |
|
......................................ர வந்தனென், யானே |
|
15 |
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் |
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை |
|
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் |
|
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|