முகப்பு | தொடக்கம் |
வரை புரையும் மழ களிற்றின் |
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
|
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|