பாடிய புலவர்கள்

பத்துப்பாட்டுப் பாடியவர்கள்

1. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்-சிறுபாண் ஆற்றுப்படை
2. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்-மலை படு கடாம்
3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்-பெரும்பாண் ஆற்றுப்படை, பட்டினப் பாலை
4. கபிலர்-குறிஞ்சிப் பாட்டு
5. காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்-முல்லைப்பாட்டு
6. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
7. மாங்குடிமருதனார்-மதுரைக் காஞ்சி
8. முடத்தாமக் கண்ணியார்-பொருநர் ஆற்றுப்படை
 

ஐங்குறுநூற்றுப் புலவர்கள்

[கடவுள் வாழ்த்து நீங்கலாக, இந் நூலில் அடங்கிய பாடல்களைப் பாடியவர்களைக் குறித்து ஏடுகளில் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.]

1. அம் மூவனார் 101-200
2. ஓதலாந்தையார் 301-400
3. ஓரம்போகியார் 1-100
4. கபிலர் 201-300
5. பாரதம் பாடிய பெருந்தேவனார் [கடவுள் வாழ்த்துப் பாடல்]
6. பேயனார் 401-500
 

பதிற்றுப்பத்துப் புலவர்கள்

1. அரிசில் கிழார்-எட்டாம் பத்து
2. கபிலர்-ஏழாம் பத்து
3. காக்கைபாடினியார் நச்செள்ளையார்-ஆறாம் பத்து
4. காப்பியாற்றுக் காப்பியனார்-நான்காம் பத்து
5. குமட்டூர்க் கண்ணனார்-இரண்டாம் பத்து
6. பரணர்-ஐந்தாம் பத்து
7. பாலைக்கௌதமனார்-மூன்றாம் பத்து
8. பெருங்குன்றூர் கிழார் - ஒன்பதாம் பத்து
 

பரிபாடல் பாடிய புலவர்கள்

1. ஆசிரியன் நல்லந்துவனார் 6, 8, 11, 20
2. இளம்பெருவழுதியார் 15
3. கடுவன் இளவெயினனார் 3, 4, 5
4. கரும்பிள்ளைப் பூதனார் 10
5. கீரந்தையார் 2
6. குன்றம் பூதனார் 9, 18
7. கேசவனார் 14
8. நப்பண்ணனார் 19
9. நல்லச்சுதனார் 21
10. நல்லழுசியார் 16, 17
11. நல்லெழுனியார் 13
12. நல் வழுதியார் 12
13. மையோடக் கோவனார் 7
 

கலித்தொகை

நல்லந்துவனார்