பகவற்கீதையின்
செய்தி அமைப்பு நடை முதலியவற்றைநோக்கின், கார்பு (Garbe) கூறியுள்னவாறு, அந்நூல் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் தோன்றிக் கி. பி. 2 ஆம் நூற்றாண்டில்
விரிவுபடுத்தப் பெற்றதென்று கொள்வதே பொருத்தமாம். அன்றி, கி.மு. 5 ஆம் நூற்றாண்டில்
தோன்றியதெனக் கொள்வாரும், அதன்பின் மேன்மேலும் விரிவும் திருத்தமும் பெற்று வந்தள்ளமையை மறுக்க முடியாது. கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒருபோரின் சிறு நிகழ்ச்சியைப்
பிற்காலத்துப் பிராமணனொருவன் பயன்படுத்திக் கொண்டு, நால்வரணத்தை நிலைநாட்ட ஒரு பெருமுயற்சி செய்துள்ளான் என்பதே உண்மையான செய்தியாம். பகவற்கீதையிற் கூறப்பட்டுள்ள
ஒழுக்கநெறிகளும் மெய்ப்பொருள் விளக்கங்களும், இறந்துபட்ட தமிழ் ஓத்துக்களினின்று
எடுத்தாண்டவையே என அறிக.
|
திருவள்ளுவர் அறிவியலிலும் அரசியலிலும் மட்டுமின்றி, மெய்ப் பொருளியலிலும் மேம்பட்டவராவர், ஆயினும் , தமிழர் அவரை அறியாதும் புறக்கணித்தும், இவ்விருபதாம் நூற்றாண்டிலும் அயலாரும் தமிழ்ப் பகைவரும் இறப்ப இழிந்தாருமான ஆரியரைப் போற்றிப்
புகழ்ந்து வருகின்றனர்.
உலகத்தில்
ஒப்புயர்வற்றவரென ஆரியர் பறைசாற்றிவரும்
ஆதி சங்கராச்சாரியார், சிவனியம் , மாலியம் குமரம், மூத்த பிள்ளையம் (காணபத்தியம்), காளியம், கதிரவம் என்னும் அறுமத நிறுவனராகப் பாராட்டப் படுகின்றார். திருவள்ளுவரின் கடவுள் மதத்தொடு அதை
ஒப்புநோக்கின், விண்ணிற்கும் மண்ணிற்கு மிடைப்பட்ட
வேற்றுமையாம். சங்கராச்சாரியாரின் இரண்டன்மை
(அத்துவித)க் கொள்கையில் பல்வேறு முரண்பாடுகளைக்
கொண்டுள்ளமையின், பேதையரே போற்றத் தக்கதாம்.
திருவள்ளுவரின்
இருபத்தாறு மெய்ப்பொருட் கொள்கையும் அவர்
உயர்வை விளக்கிக்காட்டும்.
|
ஆரியத்
தெய்வமாகிய நான்முகனை யுட்கொண்ட முத்திரு மேனிக்
கொள்கையைத் தழுவாமையின், திருவள்ளுவர் வைதிகரல்லர்.
கடவுளில்லை
யென்றும், பூதங்கள் நான்கேயென்றும், ஒருவர் கொன்ற வுயிரியின் ஊனை
இன்னொருவர் உண்ணின் கரிசன் றென்
|