அதனினும் மூச்சொலி யடைந்தது காளவாய்
மூழக்கும் மூச்சும் மொழியொலி பெறுகை
வழக்கில் நேர்ந்த வழிநிலைத் திரிபே
திரவிடத் தாயும் ஆரிய மூலமும்
தெரியிடத் தேநம் தென்தொழி யாகும்
இந்திய நாகரி கந்தமி ழாகும்
பகுத்தறி வைப்பயன் படுத்தி யின்னே
நிறந்துப் புரவு நிலைநீர் முத்திறம்
ஆயினும் ஒரின மாத லறிக
அரசியற் கட்சி பலவா யிருப்பினும்
ஆங்கிலர் போன்மொழி யணைமின் ஒருங்கே
தாழ்த்தப் பட்ட தம்மினத் தோரை
உயர்த்தப் பெற்றோர் உயர்த்தல் கடனே
பிரித்தா னியத்தினும் பிராம ணீயம்
பன்மடி கொடிதே பகரவுங் கொடிதே
முன்ன தொருவ னுடலையே பிணித்தது
பின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும்
கல்வியுஞ் செல்வழுங் கட்டாண் மையும்
கணக்கின் பெருமையுங் கரையற் றிருந்தும்
சூத்திரர் சற்சூத் திரனெத் தம்மைத்
தாழ்த்திய தமிழர் வீழ்ச்சியை நோக்கின்
அரிமா வரிமா கரிமா வனைத்தும்
நீல நிறங்கொள் கோலங் கண்டே
நரிமா விற்கு நடுங்கிய தொக்கும்
உள்ளந் தமிழனுக் குயரா வாறு
பெருங்கலா யிழுப்பது பிராமணர்க் கஞ்சுதல்
ஆரிய வடிமை யகன்றா லொழியத்
தேறும் வழியே தென்னவர்க் கில்லை
ஆரிய வேடரி னயர்ந்தனிர் மறந்தனிர்
சீரிய மொழிநூல் செம்மையி னுணர்ந்தே
ஓரின மாகி உலகத் துயர்க
பசியும் பிணியும் பகையும் நீங்கி
இருதிற உடைமை ஆட்சியும்
ஒருகுடை நீழல் ஓங்குக உலகே.
|