"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு."

என்பன இன்னோசை யுள்ளன.

"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்"

"உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து."

"இரந்து முயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக வுலகியற்றி யான்"

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள"

என்பன பொருட் சிறப்புள்ளன.

"நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது"

என்பது சொற்சுருக்க முள்ளது.

"தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையி னிழிந்தக் கடை"   (உவமை)

"வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
 கோலொடு நின்றா னிரவு"   (உவமை)

"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
 மிக்கற்றால் நீள விடல்"   (உவமை)

"நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
 கெடுநீரார் காமக் கலன்"   (உருவகம்)

"நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கின்
 உயிர்க்கிறுதி யாகி விடும்"   (பிறிதுமொழிதல்)

"தீயினாற் சுட்டபு ணுள்ளாறும் ஆறாதே
 நாவினாற் சுட்ட வடு"   (வேற்றுமை)

"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
 நெஞ்சத் தவல மிலர்"     (வஞ்சப்புகழ்ச்சி)

"கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
 முன்னின்று பின்னோக்காச் சொல்"  (முரண்)