|  அவி 259.
நெய்சொரிந் தாயிரம் வேட்டலி னோருயிர்மெய்செகுத் துண்ணாமை நன்று.
 ஊண்சொரிந் தாயிரம் வேட்டலி னோருயிரின் ஊன்செகுத் துண்ணாமை நன்று.
 அன்னம் 1120. அனிச்சமு மோதிமத் தூவியு மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்.
 ஆகுலம் 34. மனத்துக்கண் மாசில னாத லனைத்தறனாரவா ரத்த பிற.
 ஆசாரம் 1075. அச்சமே கீழ்க ளொழுக்கமா மெச்சமவாவுண்டே லுண்டாஞ் சிறிது.
 ஆதி 1.
அகர முதல வெழுத்தெல்லா முன்னைப்பகவன் முதற்றே யுலகு.
 அகர முதல வெழுத்தெல்லா மாங்குப்பகவன் முதற்றே யுலகு.
 543. அந்தணர் நூலோ டறத்திற் கடிப்படையாய்நின்றது மன்னவன் கோல்.
 இந்திரன் 25. ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோவாம்வேந்தனே சாலுங் கரி.
 ''வேந்தன் மேய தீம்புன லுக கமும்'' (தொல். அகத். 5.) இந்திரன் என்னும் வடசொல்லும் அரசன் என்று பொருள் படுவதே. எ-டு ; இராசேந்திரன், கசேந்திரன், கவீந்திரன், நரேந்திரன், மிருகேந்திரன், ரவீந்திரன்.
 |