ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோவாம்
மைந்தவனே சாலுங் கரி.

மைந்தவன்-வலிமையுடையோன்.

உல்கு

756. உறுபொருளும் தீர்வைப் பொருளுந்தன் னொன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

ஆயப் பொருளும் என்றும் அமையலாம்.

கணம்

29. குணமென்னுங் குன்றேறி நின்ற முனிவர்
சினநொடியுங் காத்த லரிது.

காரணம்

270. இவர்பல ரான கரணியே நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

529. தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
கேதறத் தானே வரும்.

ஏதறுதல் காரணம் நீங்குதல். ஓநோ: ஏது+ஈடு=ஏதீடு.

530. உழைப்பிரிந்து பின்பய னோக்கிவந் தானை
யிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

சலம்

660. அல்வழியாற் செல்வஞ்செய் தேமார்த்தல் பைம்மணணாங்
கொள்கலநீர் பெய்திரீஇ யற்று.

956. படிறுற்றுப் பண்பில செய்யார்மா சற்ற
குடிபற்றி வாழ்துமென் பார்.

நாமம்

360. காம வெகுளி மயக்க மிவற்றின்பேர்
தாமுங் கெடக்கெடு நோய்.

பாக்கியம்

1141. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் 
பலரறியார் நற்பேற்றி னால்.