பாவம்
146. பகைகரி சச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.
பாவி
168. அழுக்கா றெனுமோர் கரிசன் திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.
அழுக்கா றெனுமோ ரறங்கடையன் சொம்மழித்து
தீயுழி யுய்த்து விடும்.
இன்மை யெனுமோர் கரிசன் மறுமையு
மிம்மையு மின்று வரும்.
வித்தகர்
235. ஆதல்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
மாதிறவோர்க் கல்லா லரிது.
|
அங்கணம்
வணங்கு-வாங்கு-வங்கு-அங்கு. அங்குதல் வளைதல்,
சாய்தல். அங்கணம் - வாட்டசாட்டமாயுள்ள சாய்கடை.
அங்கணம்-அங்கண(வ.) அச்சு
அட்டு குறுக்கு. அட்டு-அச்சு=வண்டிக்கும் தேர்க்கும்
சக்கரம் கோப்பதற்குக் குறுக்காக அமைக்கப்படும் கட்டை அல்லது உத்தர்ம். அச்சு-அசா(வ.) அதி அதித்தல்=வீங்குதல், பருத்தல், மிகுதல், இவ்வினை இன்று வழக்கற்றது. அதி+இகம்
= அதிகம் - அதிகன் = மிக்கோன், இறைவன்.அதி+அனம்=அதனம்=மிகுதி. அதி-அதை, அதைத்தல் வீங்கு தல். அதி-அதி(வ.) அதிகாரம் கடு-கடி-கரி-காரம்=மிகுதி, கடுமை, உறைப்பு வலிமை. அதிகரித்தல் (மீமிசைச்சொல்) மிகப்
பெருகுதல். அதிகரி-அதிகாரம்=மிகுதி, வலிமை, கையாளும் உரிமை, ஆளும் வலிமை, நூலின் பெரும்பகுதி.
அதி, கரி, அதிகரி என்னும் மூவினைகளும் வடமொழியிலில்லை. அதி+க்ரு (செய்) என்று சொற் புணர்த்தித் தலைமையாயிருத்தல் என்று பொருள் புணர்ப்பர். அதிகாரம்-அதிகார(வ.).
|