(6) மங்கலச் சின்னம்.எண்மங்கலமும் மங்கலம் பதினாறும்.

(7) மங்கல வழக்கு. (நன். 267).

(8) நன்மை." மங்கல மென்ப மனைமாட்ச"(குறள். 60)

மங்கலம்-மங்களம். வடவர் காட்டும் மூலம்.மங்க்=செல்,இயங்கு. பகுத்தறிவுடையார் கண்டு தெளிக.

மந்திரி: முன்னுதல் = கருதுதல், எண்ணுதல். முன் - மன். மன்+திரம்(திறம்) = மந்திரம் ஒ.நோ: மன்று - மந்து - மந்தை.

மந்திரம்=எண்ணத்தின் திண்மை, சூழ்வினை.

மந்திரம்-மந்திரி=மந்திரம் செய்பவன்,அரசியல் வினைகளைச் சூழ்பவன்.

மந்திரம்-மந்த்ரம்(வ.). மந்திரி-மந்த்ரின்(வ.).

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப."

என்று தொல்காப்பியம் (1334) கூறுவது மதவியல் பற்றிய மந்திரமேனும், சொல் வேறன்மை யறிக.

மயிர்: மை=கருமை.மை-(மய்)-மயிர்=கரிய முடி.ஒ. நோ:ஐ-அயிர், பை-பயிர், உய்-உயிர், செய்-செயிர், செயிர்த்தல்=சிவத்தல். சினத்தல். மயிர்-மசிர்-ச்மச்ரு(வ.).

மயில் மை=கருமை,நீலம்.மை+இல்=மயில்=நீலப் பீலிக் கண்களையுடைய குறிஞ்சி நிலப்பறவை. இது குமரி நாட்டிலேயே குறிஞ்சி வாணரால் முருகனூர்தியாகக் கொள்ளப்பட்டு விட்டது. மயில்-மயூர(வ).

மன் முன்னுதல்=கருதுதல்,எண்ணுதல்,சூழ்தல். ASmunan=to think. முன்-மன்ப=பகுத்தறிவும் மதிநுட்பமும் கொண்டு சிறப்பாகக் கருதி யறியும் மாந்தன். மன்பதை=மக்கட்கூட்டம்.

"ஆறறி வதுவே யவற்றோடு மனனே" (தொல்.1324).
"மக்கள் தாமே யாறறி உயிரே" (153)

மன்-மநு(வ.),OE man,OS,OHG man,E man ,Goth. manna.