மனம்: முன்னுதல் கருதுதல்.
முன்-முன்னம்=மனம்(திவா,) முன்னம்-முனம்-மனம்-மனஸ்(வ.),
L mens,(AS munan to think) OE (ge) mynd,ME myn d,E mind. மாத்திரை: 406 ஆம் குறளுரையைப் பார்க்க. மாதர்: மா=அழகு மா-மாது=அழகு,(அழகுள்ள) பெண்,(பெரும்பாலும் பெண்மேற் கொள்ளும்) காதல். மாது-மாதர்=அழகு,பெண்,காதல். மணந்த பெண்டிரெல்லாரும் பெரும்பாலும் பின்னர்த் தாய்மாராதலாலும் பெண்தெய்வக் கருத்தில் தாய்மைக் கருத்துங் கலந்திருப்பதனாலும்.
மகள் என்னும் சொல் தாயையுங் குறித்தாலும், மாதர் என்னும் சொல் ஆரியமொழிகளில் தாய்ப்பொருள் பெறலாயிற்று.
L mater ,GK mater,G.mutter,E
mother,வ.மாத்ரு. மாலை முள்-முள்கு-முள்குதல்=முயங்குதல்,
கலத்தல் முள்-(முய்)-முய-முயங்கு-முயக்கு-முயக்கம். முயங்கு-மயங்கு-மயக்கு-மயக்கம்.
முய-மய. மயத்தல்=மயங்குதல், கலத்தல். மய-மயல்-மால்=மயக்கம்,
கலப்பு. மால்-மாலை=பூக்கள்கலந்தகோவை. இரவுங் கலந்த வேளை.மாலை-மாலா(வ.), மானம்: மன்=பெருமை,
பெரியோன், தலைவன், கணவன், அரசன். மன்-மான்-மானம்=பெருமை.
மானம்-மான்(வ.). மீன்: மின்-மீன்=மின்னும் வெண்ணிறமீன்,மின்னும் வெள்ளி அல்லது வான்சுடர். வெள்ளாட்டின் பெயர் அதன் இனமான காராட்டிற்கும் செவ்வாட்டிற்கும் பொதுப்பெயராக வழங்கினாற்போல, மின்னும் கெண்டை
மீன் பெயர் அதன் இனமான பிறவகைகட்கும் வழங்கி வருகின்ற தென்க. மீன்-மீனம்(பெருமீன்)-மீன(வ.). முகம்.
முகு-முகிழ், முகிழ்தல்=தோன்றுதல்.
முகு-முகம்.முகஞ்செய்தல்=தோன்றுதல்.
|