ஒரு பொருள் தோன்றும்போது அதன் முன்புறமே காண்பார்க்குத் தோன்றுமாதலால் ,தோற்றத்தைக் குறிக்கும் முகம் என்னுஞ் சொல்
பொதுவாக முன்புறத்திற்கு அல்லது முன்னுறுப்பிற்குப்
பெயராயிற்று.இயங்குதிணை யுயிரிகட்கெல்லாம்
தனியடையாளமும் இனவகையும் காட்டக் கூடியது தலையின்
முன்புறமேயாதலால், அதனுக்கே முகம் என்னும் சொல் சிறப்பாகப் பெயராயிற்று. முகம்: முக(வ.kh) முத்தம்:
முட்டு-முத்து=முட்டைபோல் உருண்டு கிளிஞ்சிற்குள் சிறிதாக விளையும் ஒளிக்கல் வகை,
உருண்டு திரண்ட சிறுவிதை. முத்து-முத்தம்(பெருமுத்து)-முக்த(வ.). வடவர் சிப்பியினின்று விடுதலை பெற்றதென்று பொருட்கரணியங் காட்டுவது பேதைகட்கே ஏற்கும். யாமம்: இது முன்னரே கூறப்பட்டது. ஏமம் என்னும் சொலைப் பார்க்க. வஞ்சி;
வங்குதல் வளைதல் , வங்கு-வஞ்சு-வஞ்சி. ஒ.நோ அங்கு (வளை) - அஞ்சு, பொங்கு-பொஞ்சு. ஒருவனை வஞ்சிப்பது அவன் தப்பமுடியாவாறு வட்டஞ்சுற்றி வளைவது போலிருத்தலால், வளைதற் கருத்தில் வஞ்சித்தற் கருத்துப் பிறந்தது.
circumvent என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக. வஞ்சி-வஞ்சம், வஞ்சகம், வஞ்சனம், வஞ்சனை. வஞ்சி: வஞ்ச்(வ.), வஞ்சகம்--வஞ்சக(வ.), வஞ்சனம்-- வஞ்சன(வ.) வட்டு: வள்--வட்டு=வட்டமான விளையாட்டு அல்லது சூதாட்டக் கருவி. வட்டு-வட்டம்-வ்ருத்த(வ.). வண்ணம் வள்-வளை, வளைத்தல்=வளைத்தெழுதுதல், எழுதுதல் வரைதல். "உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" (நெடுநல். 113)
|