வாணிகன் -- வாணியன். வணிகன் -- வணிகு. வணிகு -- வணிஜ்(வ.),
வணிகன் -- வணிஜ(வ.). விக்குள்:
விக்கு--விக்கல்-விக்குள் (ஒலிக்குறிப்புச்சொல்)
விக்கல்--ஹிக்கா (வ.)
E hiccup. hiccough. இவ்வொலிக்குறிப்புச்சொல் குமரிநாட்டிலேயே தோன்றிவிட்டது.ஆதலால் அதன் திரிபே ஆங்கிலச்சொல்லும் வடசொல்லும். வித்து: வித்து==விதை.விதை--வீஜ,பீஜ(வ.) வியம்:விள்ளுதல்= விரிதல்.விள்--(விய்)--வியம்=விரிவு, வியம்--வியன்--வியல்=அகலம்."வியலென் கிளவி யகலப் பொருட்டே." (தொல்.சொல்.354). வியம்--வியத்(வ.). விழி;
விழித்தல்=கண்திறத்தல்,பார்த்தல்,அறிதல்.விழி=கண்,பார்வை,அறிவு,ஓதி(ஞானம்.) விழி--L.vide,
Gk(w) oida, Skt vid, OE, OS witan, OHG wizzan, ON vita, Goth witan. வெஃகு:
விள் -- விர் -- (விரு) -- விரும்பு. விள் -- வெள் --
வெண்டு. வேண்டு. வெள்-- வேள்-- வேண் = விருப்பம்.
வேண்டுதல் = விரும்புதல், விரும்பியிரத்தல்.
வெள் -- வெள்கு -- வெஃகு, வெஃகுதல் = விரும்புதல்,
பேராசை கொள்ளுதல், பிறர் பொருளை விரும்புதல்.
வெஃகு -- க. பேக்கு = வேண்டு
E.beg.
பேக்கு -- பிக்ஷ்(வ.). வேலை வேல்
வேலி = வேலமுட்கிளையால் அமைத்த வளைசல் சுற்றெல்லை,
எல்லை. வேல் -- வேலை = எல்லை, காலவெல்லை, பொழுது.
வேலை -- வேளை = நேரம், அமையம், பொழுது. வேலை --
வேலா(வ.) இவற்றின் விளக்கத்தை யெல்லாம் என் வடமெழி வரலாறு என்னும் நூலுட் காண்க. இன்னும் இவைபோன்ற சொற்கள் பல உள.விரிவஞ்சி அவை இங்குக் கூறப்பட்டில.
|