சாதியிலே தொண்ணூற்றென்
பாணாஞ் சாதி
சமயத்திற் பதின்மூன்றஞ் சமய மாகும்
நீதியிலே சிவனுடைய நீதி யாகும்
நிலைமையிலே வேதாந்த நிலைமை யாகும்
ஆதியிலே யெங்களுர் கருவூ ராகும்
அந்தத்திற் போயடைவோம் பேரூர் தன்னில்
சோதியிலே பரஞ்சோதிக் கூட்ட மாகும்
சொல்லுதற்கு மெங்குலஞ்சுக் கிலம தாமே. |