தாயிற்று. செய்யுள் மூலங்களிற் சில பாட பேதங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. அருஞ்சொற் பொருளகராதியும், செய்யுள் முதற் குறிப்பகராதியும் படிப்பவர்க்கு உதவியாகச் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந் நூல் அச்சிடப்படுங்காலத்து ஒப்புநோக்கித் திருத்தம் புரிந்துதவிய சென்னை அரசினர் முகமதிய உயர்நிலைப் பாடசாலைத் தமிழாசிரியர் திரு. அ. நடராசபிள்ளையவர்கட்கு எம் உளமார்ந்த நன்றி உரியதாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் விருத்தியுரை வேண்டப் பெறும் நூல்கட்கும் தக்க உரை இயற்றி யுதவ விழையும் எம் முள்ளப்பாங் குணர்ந்து, அங்ஙனமே செய்துதரக் கேட்டிருக்கும் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு எம் நன்றி யென்றும் உரித்தாகின்றது.
இம் முயற்சி யினிது நிறைவேறத் தோன்றாத் துணையாய் நிற்கும் இறைவன் திருவருளை என்றும் நினைந்து வழுத்துகின்றோம்.
தமிழ் நூற்பயிற்சி பெறும் யாவர்க்கும் இவ்வுரை மிகவும் பயன்படுமாதலின், தமிழகத்தார் இத்தகைய நூல்களை வாங்கிப்
பதிப்பாளர்க்கு ஊக்கமளிக்க வேண்டுகின்றோம்.
புலவரகம்,
பாளையங்கோட்டை,
27-1-36 |
இங்ஙனம்,
பு.சி. புன்னைவனநாதன்,
தமிழாசிரியர். |
|