மதிப்புரை
நான்மணிக்கடிகை
என்பது, கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் ஒன்றாகும்.
கீழ்க்கணக்கு
நூல்கள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி,
ஏலாதி என்பன.
இனி
நான்மணிக்கடிகை என்னும் இந்நூலை இயற்றினார்
விளம்பிநாகனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். நாகனார் என்னும் பெயருடைய இவர் விளம்பியென்னும் ஊரிலே பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் என்று வழங்கப்பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். இவர் கடைச்சங்கப் புலவர் எனக் கொள்ளப்படுதலின் இவரது காலம் கி. பி. 200க்கு முற்பட்டதெனக் கருதலாம்.
இவர்
இயற்றிய இந் நூலின் காப்புச் செய்யுளான் இவரது
சமயம் வைணவம் என்பது தேற்றம்.
‘நான்மணிக்கடிகை' என்னும் இந்நூற்பெயர்,
நந்நான்கு வகையான நீதி மணிகளாற்
|