கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன் என விரியும். கடவுள் வாழ்த்து உட்பட நூற்று நான்கு வெண்பாக்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. இது, கடைச்சங்க நூலாகலின் இதன் நடைச்சிறப்பினைப்பற்றிக் கூறல்வேண்டா.

இந் நூற்குப் பழைய உரை ஒன்று உளதேனும் அது குறிப்புரையா யிருக்கின்றமையின் மாணவர்க்கும் பிறர்க்கும் தெளிவான முறையிற் பயன்படுமாறு திருவாளர் தி. சு. பாலசுந்தரம்பிள்ளை யவர்களால் எழுதப்பட்ட பதவுரை கருத்துரை விளக்கவுரைகளோடு இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

மாணவர்தம் பருவத்திற்கேற்ற நீதிகளும், உண்மைகளும் இந்நூலின்கண் மிளிர்வதனால், இது பள்ளிக்கூடங்களிலும் பாடமாக வைக்கப்படுகின்றது. தமிழகம் இதனை ஆதரிப்பதாக ;

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.