‘’வனப்பியல் தானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியால் தாயபனுவலோ
டம்மை தானே அடிநிமிர் பின்றே’’

என்ற தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல் 235 ஆம் சூத்திரத்துப் பேராசிரியரும் நச்சினார்கினியரும் உரைத்தலான் உணர்ந்து கொள்க. 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாவன;-

‘’நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’’

என்ற பாட்டிற் கண்டபடி (1) சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார், (2) விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை, (3) பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பது, (4) கபிலர் பாடிய இன்னா நாற்பது, (5) மதுரைக் கண்ணங் கூத்தனார் இயற்றிய கார் நாற்பது, (6) பொய்கையார் பாடிய களவழி நாற்பது, (7) மாறன் பொறையனார் இயற்றிய ஐந்தினை ஐம்பது, (8) கண்ணஞ் சேந்தனார் பாடிய திணைமொழி ஐம்பது, (9) மூவாதியார் இயற்றிய ஐந்தினை எழுபது, (10) கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது, (11) திருவள்ளுவனா ரியற்றிய திருக்குறள், (12) நல்லாதனார் இயற்றிய திரிகடுகம், (13) பெருவாயின் முள்ளியார் பாடிய ஆசாரக்கோவை, (14) முன்றுறை யரையனார் பாடிய பழமொழி, (15) காரியாசான் பாடிய சிறுபஞ்ச மூலம், (16) மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை, (17) கூடலூர்க்கிழார் இயற்றிய முதுமொழிக்காஞ்சி, (18) கணிமேதாவியார் இயற்றிய ஏலாதி என்பன.

இவ்வெண்பாப் பழம் பிரதிகளுள் ‘’இன்னிலைய காஞ்சியுடனேலாதி என்பவே, நன்னிலைய தாகுங் கணக்கு,’’