‘’ஐந்தொகை முப்பால்’’, ‘’நன்னிலைய வாங்கீழ்க் கணக்கு’’ எனச் சிறிது சிறிது வேறுபட்டுக் காணப்படுதலின், சிலர் இன்னிலை யென்று பொய்கையார் பாடிய 45 வெண்பாக்களடங்கிய நூலை மேற்குறித்த கைந்நிலைக்குப் பதிலாகக் கூறுவர். கீழ்க்ணக்கு நூல்கள் பதினெட்டு இவையே என்று இன்னும் வரையறுக்கப்படாமைவியப்பே.
மருத்துவ நூலிற் கூறப்பட்ட கண்டங்கத்திரிவேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லிவேர், நெருஞ்சிவேர் பெருமல்லிவேர் ஆகிய பஞ்ச மூலங்கள் மக்கள் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுட்களிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்துணர்கின்றவர் பிறவி நோயைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்ட வல்லது.

இந்நூல் இயற்றியவர் காரியாசான். இவர் ஆசிரியர் மாக்காயனார். இவை இந்நூற் பாயிரச் செய்யுளால் விளங்கும். இந்நூலாசிரியர் சைன மதத்தவராவர்.

இந்நூல் பாயிரச் செய்யுள் உள்பட 100 செய்யுட்கள் கொடண்டது. இவற்றில்,

‘’வைதா னொருவ னினிதீய வாழ்த்திய
தெய்தா வுரையை யறிவானே-னொய்த
லறிவறி யாவாண் டெனவுரைப்பர் வாயுட்
டறிவெறியார் தக்காரே தாம்’’

‘’நெடியமண் ணென்று ராஅ யத்தன்
தெவ்வந் தணிப்பா னிவையென்னாம் பெற்றானைத்
தெய்வமாத் தேறுமாற் றேர்ந்து’’

என்ற இரண்டு செய்யுட்களின் மூலமட்டும் வழுச்செறிந்து சிதைந்து பொருள் கண்டு கொள்ளக்கூடாத முறையில் அமைந்துள்ளன. இந்நூலிற் பதிப்பித்துள்ள பழைய பொழிப்புரை கொண்டு இற்றைக்கு அறுபதாண்டுகட்கு முன் யுவ ஆண்டில் வெளியான பதிப்பிலும் இதே பாடங் காணப்படுகின்றது. ஆதலின்