விளக்கம் உள்ளுறை, குறிப்பு, இவையனைத்தும் யான் ஆய்ந்து எழுதியவையே எனக் கண்டுணர்க.

நெடுங் கடற் றண்சேர்ப்ப நின்னோடுரையேன்
ஒடுங்கு மடற் பெண்ணை யன்றிற்குஞ் சொல்லேன்
கடுஞ்சூளிற் றான்கண்டு கானலுண் மேயும்
தடந்தாண் மட நாராய் கேள்.

இது 50 ஆம் பாடல்

இதற்கு உரை வரையத் தொடங்கினேன் "சேர்ப்ப" என்பதை நெய்தனிலத் தலைவனை விளித்ததாகக் கொள்ளின் மடநாராய் என்ற விளிக்குப் பொருள் என்னை? தலைவி தலைவனைப் பிரிந்திருந்து தானே யிரங்குவள். தலைவனை முன்னிலைப் படுத்தி யழைத்து நாரையையும் முன்னிலைப்படுத்தி எவ்வாறு இரங்குவது என்றெல்லாம் ஆய்ந்து பின் ஒருவழி துணிந்து எனக்குப் பட்டதை வரைந்தேன். வேறுவழியின்றி இடர்ப்பட்ட பொருள் இது. "சேர்ப்ப-கடற்கரையாகிய ஆண் மகனே. என்று அஃறிணைப் பொருளை யுயர்திணையாக்கி யழைத்ததாகப் பொருள் கொண்டேன்.

மணிநிற நெய்தன் மலர்புரையுங் கண்ணா
யணிநல முண்டிறந்து நம்மருளா விட்ட
துணிமுந் நீர்ச்சேர்ப்பதற்குத் தூதோடு வந்த
பணிமொழிப் புள்ளே பற.

51-ஆம் கவி இது.

"மணி நிற நெய்தல் மலர் புரையுங் கண்ணாய்" என்று முதலடியில் நிற்கின்றது. "பணி மொழிப்புள்ளே பற" என்பது இறுதியடி. இரண்டும் விளியெனக் கொள்ளின் துறைப்பொருள் எவ்வாறு அமையும்? கண்ணாய் எனத் தலைவி தோழியை விளித்தாள் என்றால் புள்ளே என்ற விளிக்குப் பொருள் பொருந்தாது. புள்ளே என்ற நாரையை யழைத்தாள் என்றால்