எண்பிறக்கு
ஒழிய-எண்ணங்கள்
எட்டாமல் நீங்க 11-65
எண்பேராயம்-எண்வகைப்
பெருங்குழு 1-17
எம் அனை - எம் தாய் 10 - 39
எயில் - மதில் 7 - 89
எயிறு - பல் 18 - 52
எய்யா - அறியாத 18 - 85
எரி ஊட்டுதல் - தீயில் இடுதல் 16 - 98
எரிகதிர் - ஞாயிறு : சூரியன் 15 - 23
எரிபொத்தி - அழலைமூட்டி 16 - 26
எருவை-பருந்து; கழுகு 6 - 117
எல் - இரவு 13 - 82
எல் - ஒளி 22 - 152
எல்வளை-ஒளி பொருந்திய
வளையலையுடையவள் 8 - 24
எவ்வம் - துன்பம் 22 - 46
எழில் - அழகு 11 - 78
எழினி - திரைச்சீலை 5 - 3
எழுதுவரி-பத்திக்கீற்று 3 - 122
எள்ளினை - இகழ்ந்தாய்:
(முன்னிலை ஒருமை
வினை) 21 - 105--6
எள்ளுதல்-இகழ்தல்: இழித்துக்
கூறுதல் 20 - 14
எள்ளுரை - இகழ்ச்சிச்
சொல் 18 - 10
எறிதல்-கோலாலடித்தல் 23 - 40
என்கோ - என்பேனோ 5 - 103
என்பு - எலும்பு 6 - 107
ஏ - அம்பு 7 - 127
ஏகாந்தம் - அநைகாந்திகம்;
ஒன்றுபட்டது 29 - 274
ஏடு - இதழ்; பூவின் மடல் 19 - 3
ஏதமில் குணப்பொருள் 5 - 71
ஏதம் - குற்றம் 7 - 31
ஏது-பயன்தரும் தன்மை 7 - 20
ஏத்துதல்-வணங்குதல் 12 - 102
ஏந்தல் - நிமிர்தல் 6 - 116
ஏமம் - பாதுகாப்பு 30 - 13
ஏமாந்திருத்தல் - ஏக்கற்று
இருத்தல் 14 - 50
|
ஏமுற
- இன்படைய 21 - 165
ஏலம் - மணம் 23 - 68
ஏற்றூண் - இரந்துண்ணும்
உணவு 14 - 7
ஏனாதி-சேனைத்தலைவர்க்கு
அரசனால் அளிக்கப்
பெறும் பட்டப் பெயர் 22 - 205
ஐ அரி-அழகிய இரேகை 21 - 45
ஐ என - விரைவுடன்;
வியக்குமாறு 12 - 24
ஐது - அழகுடையது 10 - 2
ஐம்படை - ஐம்படைத்தாலி
யென்னும் குழந்தைகட்கு
அணியும் அணி 3 - 138
ஐம்பெருங்குழு - ஐந்து
பெரிய கூட்டம்; அமைச்சர்,
புரோகிதர், படைத்தலைவர்
தூதுவர், சாரணர் 1 - 17
ஐயம் - ஐயப்படுதல்; சந்தேகம் 6 - 158
ஐயரி-அழகிய செவ்வரி 16 - 45
ஐயவி - வெண் சிறுகடுகு 7 - 73
ஐவகைச் சீலம் - காமம்,
கொலை, கள், பொய்,
களவு என்னும் ஐந்து
வகைப் பாவங்களையும்
நீக்கி ஒழுகுவது 2 - 68
ஐவில்-ஐந்துவில்லளவு 4 - 89
ஒடிமரம் - ஒடிந்த பாய்மரத்
துண்டு 16 - 14
ஒடுவை-ஒருவகைமரம் 6 - 80
ஒட்டல்-சூளுரைத்தல் (சபதஞ்
செய்தல்) 1 - 60
ஒத்த முடிவின் ஓரறம் 12 - 117
ஒரீஇ - ஒருவி : நீங்கி 4 - 103
ஒருசிறை : ஒரு பக்கம் 19 - 64
ஒருசிறைப்பாடு - ஒருபுறத்தின்
பக்கம் 23 - 50
ஒருதலை - உறுதி 11 - 35
ஒருதனி - தன்னந்தனி 14 - 71
ஒருதனியோங்கிய திருமலர் 15 - 76
ஒரு பேரின்பம் - ஒப்பற்ற
பெரிய இன்பம் 9 - 36 |