அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
ஒல்குதல் - அசைதல் 7 - 51
ஒளித்தல் - மறைத்தல் 7 - 27
ஒளிறுவாள்-விளங்குகின்றவாள் 1 - 68
ஒளிறுவாள் மறவர் 1 - 68
ஒள்ளியது - சிறப்புடையது 21 - 108
ஒறுக்கும்-தண்டிக்கும் 19 - 43
ஒற்கா-ஒல்கா: தளராத 15 - 18
ஒற்றன் - உளவறிந்து கூறுவோன் 26 - 27
ஒன்றுதல் - பொருந்துதல்:
அதிட்டித்து நிற்றல் 19 - 6
ஓங்குயர்-மிக உயர்ந்த: (ஒரு
பொருட் பன்மொழி) 14 - 54
ஓங்குயர்-பெருஞ்சிறப்பு 14 - 54
ஓங்குயர்-விழுச்சீர் 1 - 1
ஓடுதல்-பரவுதல் 15 - 53
ஓடுதல்-பரவுதல்: மிகுதியாதல் 21 - 157
ஓதி-கூந்தல் 23 - 24
ஓதை - ஓசை: ஒலி 7 - 69
ஓத்து-மறை:வேதம், உலகியலுக்கு
ஏற்ற தன்மையுடையது
என்பது
பொருள் 13 - 25
ஒம்புதல்-பாதுகாத்தல் 13 - 14
ஓம்புவை-பாதுகாப்பாய் 21 - 158
கங்குல் - இரவு 6 - 25
கங்கைப்பேரியாறு 10 - 56
கச்சை - யானை அடிவயிற்றில்
கட்டுங் கயிறு 1 - 28
கஞ்சகாரர் - வெண்கலக்
கன்னார் 28 - 35
கஞ்சன் - நீர் (பதிகம்) 10
கஞ்சுகன் - சட்டையிட்ட
அரச சேவகன் 28 - 178
கடகம் - கைவளை 6 - 114
கடம் - காடு 23 - 112
கடம் - குடம் 29 - 73
கடம் - கடன்:காணிக்கை 3 - 70
கடம் - அருநெறி: அரிய
வழி 13 - 41
கடம்பன் - கடப்பமாலை
யணிந்தவன்: முருகவேள் 4 - 49
கடல்வணன்-திருமால் 27 - 98
கடல்வயிறு - கடலில் உள்ளிடம் 24 - 63
கடவுள்-தெய்வத்தச்சன் 20 - 111
கடவுள் மண்டிலம் - ஞாயிற்று
மண்டிலம் 22 - 1
கடாஅம் - மதநீர் 19 - 22
கடி - காவல்; காப்பு 6 - 105
கடி - பேய் 6 - 49
கடிஞை - பிச்சையேற்குங்
கலம் (திருவோடு என
வழங்குவர்) (பதிகம்) 63
கடிது - விரைவு 16 - 48
கடிப்பகை-பேய்க்குப்பகை:
வேம்பும் வெண் சிறுகடுகும் 7 - 58
கடிப்பு - பறையடிக்குங்
குறுந்தடி 25 - 51
கடியின் காவல்-மணத்தின்
பின் பாதுகாப்பு 18 .98
கடுகுதல் - மிகுதல் 14-80
கடுங்கண் - தறுகண்மை:
அஞ்சாத தன்மை 4 - 46
கடுஞ்சூல்-முதற்கருப்பம் 7 - 82
கடுநவை-கொடியதுன்பம் சு-25
கடுவரல் - விரைந்து செல்லல் 17 - 25
கடுவன் - ஆண்குரங்கு 19 - 74
கடைகொள - முடிவெய்த 21 - 174
கடைமணி - கண் கருமணியின்
கடை 3 - 22
கட்டழற் கடும்பசி 17 - 13
கட்டி - கருப்புக்கட்டி 27 - 264
கட்டு - உறுதி 20 - 8
கட்டு அழல் - தணியாத
நெருப்பு 17 - 13
கட்டுரை - பொருள்நிறைந்த
சொல் 23 - 5
கணவிரி - அலரிப்பூ 3 - 104
கணி சோதிடன் 24 - 59
கணிகை-பொதுமகள் 11 - 13
கண் எறிதல்-அடித்தல் 19 - 82
கண்கவர் ஓவியம் 3 - 131
கண்ட - அறிந்து கொண்ட 21 - 32