அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
கண்டம்-கழுத்து; கண்டத்தால்
பாடுதல்; மிடற்றோசை 19 - 83
கண்ணடைத்தல்-இடத்தை
மறைத்தல் 12 - 60
கண்ணி - கருதி 21 - 123
கண்ணி - தலையிற்சூடும்
மாலை 18 - 63
கண்ணிய - சொல்லப்பட்ட 27 - 256
கண்படை - கண்படுதல்;
தூங்குதல் 13 - 115
கண்மணி - கண்ணிடத்துள்ள
கருமணி 16 - 48
கண் மாறுதல்-விழித்தகண்
இமைத்தல் 3 - 40
கண் முரசு - முகத்தையுடைய
முரசு 1 - 69
கதலிகைக் கொடி - துகிற்
கொடி 1 - 52
கதழ்ந்து - விரைந்து 13 - 48
கதிரோன் - சூரியன் 12 - 83
கதிர் - ஞாயிறு 5 - 139
கதிர் - ஒளி 4 - 1
கந்தசாலி-மணமுள்ள நெல் 10 - 46
கந்தம் - தூண் 6 - 60
கந்தவுத்தி - மணப்பொருளைத்தக்கபடி
கலந்து
செய்யும் முறை 28 - 15
கந்து - தூண் 15 - 33
கந்துகக் கருத்து - பந்தாடு
தொழில் 2 - 22
கந்துடை நெடுநிலைக் கடவுள் 15 - 33
கம்பம் - நடுக்கம் 17 - 63
கம்பம் - முழக்கம் 3 - 126
கம்பலைமாக்கள்-வெவ்வேறு
காட்சிகள் கண்டு முழங்கித்
திரிவோர்; (வேடிக்கை
பார்ப்பவர்) 3 - 147
கயக்கு-கலக்கம் 16 - 85
கயவன் - கீழ்மகன் 23 - 94
கயிற்கடை-கொக்கி; அணிகளைப்
பொருத்தும்
இடம் 3 - 135
கரண்டை - கரண்டகம்;
குண்டிகை; கரகம் 3 - 86
கரத்தல் - மறைத்தல் 1 - 15
கரந்து-மறைந்து; ஒழிந்து;
நீங்கி 21 - 147
கரப்பு - மறைவு 19 - 104
கராம் - முதலை 28 - 18
கரி - சான்று: சாட்சி 11 - 120
கருகிய - இருண்ட 22 - 148
கருணாபாவனை - பிற உயிர்
கட்கு உண்டாகும் துன்பத்தை
நீக்கவிரைதல் 30 - 256
கருப்புவில் - கரும்பாகிய
வில் 20 - 92
கருவி-தொகுதி; சேர்க்கை 17 - 92
கருவுயிர்த்தல்-ஈனுதல் 18 - 55
கலக்குறுதல்-கலக்கமடைதல்;
கலங்கிப்போதல் 14 - 80
கலம்-யாழ் முதலிய கருவிகள் 28 - 42
கலம்-மரக்கலம் 7 - 70
கலம்-அணிகலம் 7 - 122
கலாம் - போர் 1 - 63
கலுழ்தல்-கலங்கல் 9 - 4
கலை - ஆடை 6 - 112
கலை நியமம் - நாமகள்
கோயில் 14 - 10
கல்அதர் - பருக்கைக்கல்
உடைய குறுவழி 13 - 39
கவயமா-காட்டுப்பசு 27 - 42
கவர்கோடல்-ஐயுறுதல் 27 - 22
கவராக் கேள்வி - தெளிந்த
நூல் கேள்வி (நற்பொருள்களைக்
கேட்டல்) 1 - 10
கவராக் கேள்வியோர் 1 - 10
கவல்வு-கவலை; வருத்தம் 16 - 47
கவான் - துடை (பதிகம்) 27
கவிர் - முள்முருக்கு 6 - 123
கவின் - அழகு 21 - 128
கவேர கன்னி - காவிரியாறு 9 - 52
கவை அடி-கவைத்த அடி;
பிளவுள்ள பாதம் 6 - 125
கழி - மிகுதி 12 - 49