அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
கழிமுடை நாற்றம்-மிகுந்த
புலால் நாற்றம் 16 - 66
கழுமுதல்-கலத்தல் 13 - 18
கழூஉம்-போக்கும் 13 - 16
கழை - மூங்கில் 20 - 23
களர் - உவர்நிலம் 10 - 47
களிக்கயல் நெடுங்கண் 12 - 14
களிறு - ஆண் யானை 18 - 140
கள் அடு குழிசி - கள்ளைக்
காய்ச்சுகின்ற பானை 14 - 66
கறவை - பசு; ஆ 12 - 93
கறையோர் - கடமை
செலுத்த வேண்டியவர்;
அரசருக்கு இறை (வரி)ப்
பொருள் கொடுக்க வுரி
யார் 19 - 161
கற்குன்றம்-செய்குன்று 19 - 102
கனாமயக்குறுதல் - கனவினால்
மயக்கம் அடைதல் 11 - 104
கனைஎரி - மிக்க நெருப்பு 2 - 42
கன்றிய - அடிப்பட்ட;
முதிர்ந்த 22 - 20
கன்னல்-நாழிகைவட்டில் 7 - 64
கன்னிக்காவல்-கன்னிப் பருவப்
பாதுகாப்பு 18 - 98
காசு - குற்றம் 17 - 22
காடமர் செல்வி-காடு கிழாள்;
துர்க்கை; காளி 18 - 115
காணம் - பொன்:
பொருள் 16 - 10
காண்தகு சிறப்பு - காணத்
தக்க அழகு 14 - 39
காதலன் - புதல்வன் 22 - 30
காதற் சுற்றம் 8 - 13
காப்புக் கடை கழிதல்-கற்பொழுக்கம்
நீங்குதல் 13 - 5
காமர் - விருப்பம் 18 - 59
காமற்கடந்த வாமன் 5 - 77
காம்பு - மூங்கில் 21 - 110
காய்தல்-சினத்தல்; வெகுளுதல் 20 - 14
காராளர் - வேளாளர் 7 102
காரிகை-அழகுடையாள் 21 - 32
காருக மடந்தை - இல்லற
ஒழுக்கினள் 23 - 105
காலக்கணிதர்-சோதிடர் 28 - 40
கால் காற்று 14 - 80
கால் கிளர்தல் - காற்றைப்
போல் எழுதல் 19 - 22
கால்கோள் - தொடக்கம் ;
துவங்குதல் 3 - 144
காவலன் - வேந்தன் 12 - 49
காவலன் - காத்தல் தொழிலையுடையவன் 13 - 115
காழியர்-பிட்டு வாணிகர் 28 - 32
காழோர் - குத்துக்கோற்காரர் 4 - 35
காழ் - வயிரம் 22 148
கிரியை -தொழில் 22 - 24
கிருத்தம்-செய்யப்படுவது
29-388
கிளவி - சொல்;பேச்சு 3 156
கிளைபயிர்தல் - இசைவகைகளை
இசைத்தல் 7 - 46
குங்கும வருணம் - சிவந்த
தொய்யிற் குழம்பு 19 - 87
குச்சரக் குடிகை - சிறிய
கோயில் கூர்ச்சர நாட்டுப்
பணியமைந்த சிறிய
கோயில் 18 - 145
குஞ்சி - குடுமி: ஆண்மக்களின்
தலைமயிர் 22 - 154
குடக்கண் - திரண்ட கண் 5 - 120
குடதிசை - மேற்குத் திசை 5 - 120
குடபால் - மேல் திசை 4 - 22
குடர்த்தொடர்மாலை-குடலினால்
தொடரப்பட்ட
மாலை 15 - 13
குடவயின் - மேற்குத்திசை 21 - 2
குடிகை - குடிசை 6 - 63
குடுமி - உச்சி: மலையின்
கொடுமுடி 20 - 22
குடைவோர்-அப்புவோர் 29 - 89
குணதிசை-கிழக்குத்திசை 5 - 119
குண்டுநீர் - ஆழமாகிய நீர் 8 - 8
குப்பை-குவியல் 16 122
குமரி-கன்னியாகுமரி என்னும்
யாறு 13 - 7