அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
குமரி - கன்னி; பகவதி
என்னும் தெய்வம் 13 - 74
குமரி - கன்னிப்பெண் தன்மை 14 - 77
குமரிமூத்த என்பாத்திரம் 14-77
குமிழ் - குமிழம்பூ 6 - 123
கும்பம் - குடம் 6 - 94
குயிலுவர் - தோற்கருவிகளைப்
பயில்வோர் 7-123
குயிற்றல் - செய்தல் 8 - 47
குரிம்பு-வரம்பு; வரையறை 18 - 3
குரல் - பூங்கொத்து 8 - 36
குரவர் - தாய்தந்தையர் 3 - 18
குரவை - வினோதக் கூத்து
ஆறினுள் ஒன்று:காமமும்
வெற்றியும் பொருளாகக்
குரவைச்செய்யுள் பாட்டாக
எழுவரேணும் எண்மரேனும்
ஒன்பதின்மரேனும்
கைபிணைந்தாடுவது 19 - 66
குரிசில் - பெருமையுடையோன் 18 - 87
குருகு-துருத்தி மூக்கு; 2 - 43
குருகு-பறவை; குருக்கத்தி 18 - 55
குருகு பெயர்க் குன்றம் -
கிரவுஞ்சமலை; (இது அன்றிற்
பறவை வடிவுடையது.) 5 - 13
குரூஉ - நிறம் 13 - 29
குழலி - கூந்தலையுடையாள் 20 - 13
குழல் - வேய்ங்குழல் 19 - 83
குழவி - குழந்தை 29 - 5
குழவியேங்கிய கூக்குரல் 13 - 17
குழிசி - பானை 6 - 90
குழுவுதல் - கூடுதல் 1 - 18
குறங்கு - தொடை 20 - 61
குறள் - குறுகிய வடிவம் 19 - 51
குறி - குறித்த இடம் 25 - 164
குறுநடைப் புதல்வர் 7 - 57
குற்றங் கெடுத்தோய் 5 - 100
கூஉய் - அழைத்து 22 - 32
கூக்குரல் - கூப்பீட்டுஒலி 13 - 17
கூட்டம்-சமவாயம் 27 - 243
கூட்டுண்ணல் - ஒன்றுபடல்;
சேர்ந்து அனுபவித்தல் 7 - 47
கூம்பு - பாய்மரம் 4 - 30
கூவியர் - அப்பவாணிகர் 28 - 32
கூவிளி - கூப்பீடாகிய
முழக்கம் 7 - 67
கூறை - புடைவை; ஆடை 16 - 30
கூற்று - கூற்றுவன் (இயமன்) 1 - 30
கூற்றுக்கண் விளிக்கும் 1 - 30
கேள்வி - நற்பொருள்களை
அறிந்தார்வாய்க் கேட்டல் 21 - 93
கைத்தூண்-வாழ்க்கை 18 - 16
கைத்தூண்-தீயவொழுக்கத்தால்
கிடைத்த உணவு 16 - 6
கைநிறை - கைகொள்ளும்
படி 23 - 48
கைம்மலை - கையையுடைய
மலைபோல்வது:யானை 26-81
கைம்மை-சிறுமை: தனக்கு
உரியளல்லாதாளை
விரும்புதல் 20 - 122
கையறவு - செயல்கெடுதல் 20 - 26
கையறுதல் - செயலறுதல் 3 - 115
கையாறு - மூர்ச்சித்தல் 4-118
கையுதிர்க்கோடல்-கையை
அசைத்துப் போகச்
செய்தல் 16 - 10
கைவிடலீயான்-கைவிடான் 5 - 41
கைவினை - செய்தொழில் 22-85
கைவினை - கைத்தொழில் 19 - 5
கொடிஞ்சி - தேர்த்தட்டு 4 - 48
கொடித்தேர் - வேந்தன் 7 - 79
கொடுமரம்-வில்: வளைந்த
மரம் என்பது பொருள் 13 - 31
கொட்பன - சுழல்வன;
சுற்றுவன 19 - 63
கொட்பு - கொள்கை;
உணர்வு வேறுபடல் 21 - 77
கொணர்க-கொண்டு வருக 10 - 39