அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
கொண்டி மகளிர் - பொருளைக்கொள்ளும்
பரத்தையர் 18 - 109
கொண்டோன்-கணவன் 22-51
கொம்பர் - கொம்பு; மரக்கிளை 19 - 57
கொளுத்துதல்-பொருத்துதல் 4 - 3
கொளை - பாட்டு 7 - 47
கொள்கை - முறைமை;
கோட்பாடு 13 - 74
கொற்கை-கொற்கை யென்னும்
பெயருடைய ஓர்
ஊர் 13 - 84
கொற்றம் - வெற்றி 23 - 11
கொற்றவன்-அரசன் 25 - 186
கோங்கு - கோங்கமரம்:
பாலைநிலக்கருப்பொருள்களுள்
ஒன்று 19 - 67
கோசம்பிக் கோமான்-உதயணன்;
கோசம்பி நகரத்து
மன்னன் என்பது பொருருள் 15 - 61
கோடணை - முழக்கம் 5 - 94
கோடு-மருப்பு; கொம்பு; 19 - 19
கிளை 4 - 17
கோட்டம் காவலர் - சிறையைப்
பாதுகாப்போர் 19 - 48
கோட்டி-மன்றம் (சபை) 1 - 43
கோணச் சந்தி-கூடல்வாய்;
வீட்டின் இறப்பு ஒன்றுபடுத்தி
இருக்கும் இடம் 19-113
கோணம் - தோட்டி; யானையை
அடக்குங் கருவி 18-163
கோயில் - அரண்மனை 20 - 96
கோலம் - அழகு 18 - 40
கோல் தொடி - திரட்சியாகிய
வளையல் 8 - 41
கோல்நிலை - செங்கோலின்
நிலைமை 7 - 8
கோல்முறை - செங்கோன்
முறைமை; அரசநீதி 18-111
கோவலர்-இடையர் 13 - 85
கோள் - கிரகம் 6 - 182
கோள்நிலை - கோட்களின்
நிலை (சூரியன் முதலிய
ஒன்பதுவகைக் கிரகங்களும்
இருக்கும் இருக்கை)
(பதிகம்) 24
கோற்றொடி - மாதர் 8 - 41
சங்கயம் - ஐயம்: சந்தேகம்
29 - 230
சதுக்கத் தெய்வம் - சதுக்கப்
பூதம் 1 - 55
சந்தி-பலவழி ஒன்று சேருமிடம் 6 - 61
சமயக் கணக்கர் சமயவாதிகள்;
மத ஆசிரியர் (பதிகம்) 88
சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினம்
(பதிகம்) 8
சம்புத்தீவு-நாவலந்தீவு 17 - 62
சயித்தம் - கோயில் 28-131
சலம் - நீர் 24 - 47
சலாகை - இரும்புச்சலாகை
12 - 66
சாகை - கிளை (பதிகம்) 5
சாந்தம் - சந்தனம் 16 - 31
சாமானியம் - பொது 27-243
சாயல் - மென்மை 2 - 14
சாயை - நிழல்; வலிமை 20 - 119
சாரணர் - சஞ்சரிப்பவர் 16 - 15
சார்பு - பற்று 21-179
சார்பு - அமைதி 4 - 106
சாளரம்-பலகணி; (சன்னல்) 4 - 53
சிக்கு - வன்மை; திண்மை 27 - 143
சிதவல் - கந்தல்; சிதைந்த
தன்மையது 3 - 106
சித்தம் - உறுதி 10 - 85
சித்திரம் - உருவம் 19 - 6
சிந்தனை - கேட்டவற்றை
நினைவு கூர்தல் 30 - 258
சிந்தாதேவி - மனத்தின்கண்
அமர்ந்திருக்கின்ற மாதெய்வம்
14 - 17
சிந்தாதேவி - கலைமகள் :
கற்றோர் நெஞ்சில் இருப்பவள்
(பதிகம்) 60
சிந்தாவிளக்கின் செழுங்கலை
நியமம் 13 - 106
சிந்துபு - சிந்தி: கீழே
வழிந்து 3 - 138