அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
சிமிலி - உறி 3 - 86
சிமையம் - கொடுமுடி 26 - 88
சிரல் - மீன்கொத்தி 4 - 24
சிலம்பு - மலை 28 - 108
சில்பலி - சிறுபலி 6 - 95
சில்லை - மீன்கொத்திப்
பறவை 8 - 29
சிவிறி - விசிறி 28 - 10
சிறுபுழை-சிறிய வாயில் 7 - 89
சிறுபுறம் - பிடர், முதுகு 2 - 51
சிறை - பக்கம் 18 - 44
சிறை - அணை 5 - 19
சிறைக்கோட்டம் - சிறைச்
சாலை (பதிகம்) 71
சிறைவீடு - சிறையினின்று
விடுபடுதல் (பதிகம்) 80
சிற்றிடை முடுக்கர் - சிறிய
இடமாகிய குறுந்தெரு 7-68
சிற்றில் - சிறிய இல்லம்
22 - 182
சீத்தல் - அழித்தல், கெடுத்தல் 14-99
சீத்து - அழித்து 20 - 11
சீப்ப - ஒட்ட; போக்க 22 - 1
சீர்நிறுப்போர் - தாளவறுதி
செய்வோர் 19 - 83
சீலம் - ஒழுக்கம்: விலக்கியன
ஒழித்து விதித்தன செய்தல் 24 - 137
சுடர் - தீக்கொழுந்து 6 - 64
சுடலைக்கான் - சுடுகாடு 16 - 25
சுடுதல் - கொளுத்துதல் 21 - 12
சுடுமண் - செங்கல் 3 - 127
சுட்டல் - பொருண்மை
காண்டல் 27 - 22
சுண்ணம்-மகரந்தப்பொடி;
பூந்துகள் 4 - 18
சுரத்தல் - பெருகுதல் 14 - 52
சுரியல் - சுருட்டை ;
(சுருண்டதன்மையது) 3 - 116
சுருங்கை - மதகு 12 - 79
சுருதி-அறவுரை கேட்டல் 30 - 258
சுருப்பு: சுரும்பு-வண்டு 18-105
சுரும்பு-மலை; வண்டு 20-107
சுரை வித்து சுரையின்
விதை 20 - 50
சூதர் - இருந்தேத்துவோர் 28-50
சூது - சூதாடுதல்; ஆயம்
உருட்டுதல் 14 - 63
சூர் - அச்சம் 16 - 55
சூல் முதிர்தல கருமுற்றுதல்;
கருவளர்தல் 13 - 8
சூழ்வோன் - சுற்றுவோன் 5 - 10
செங்கயல் நெடுங்கண் 4 - 101
செங்குணக்கு - நேர் கிழக்கு
(பதிகம்) 13
செங்கோல் - செவ்விய
கோல் முறை 16 - 10
செட்டி - செட்டுடையவன் 19 -107
செண்டு வெளி - குதிரை
வீரர் விளையாடுமிடம் 27 - 67
செம்பொருள் - செவ்விய
பொருள்: அறம் 21 - 168
செம்போக்கு - நேராகச்
செல்லுதல் 27 - 157
செயப்பாட்டுவினை - செய்வினை 23 - 77
செயலை - அசோகமரம் 24 - 38
செயிர் வழங்கு தீக்கதி 12 - 61
செய்யோள் - செம்மைநிறமுடையவள் 16 - 34
செரு - போர் 23 - 14
செருக்கி - தருக்குக்
கொண்டு; திமிர்மிக்கு 19 - 22
செருவேல் - போர்புரியும்
வேற்படை 19 - 124
செல்கதி - அடையக்கடவதாகிய
நற்கதி; நற்பயன்
பெறுதல் 13 - 88
செல்லல் - போகாதே (முன்னிலை
எதிர்மறை) ஏவல் 21 - 27
செல்வக் காவற்பேரூர் 7 - 26
செல்வுழி-செல்லும் இடம்;
வீரசுவர்க்கம் 23 - 14
செவ்வனம் - செம்மை;
நேரிய நிலை 11 - 20
செவ்வனம் - வேறாக; நேராக 3 - 81
செவ்வனம் - நன்கு (பதிகம்) 53
செவ்வி-சிறந்ததன்மை 5 - 21
செவ்வி - பருவம் 18 - 26