செறி
இருள்-மிக்க இருள் 15 - 35
செற்றம் - சினம் 1 - 63
செற்றம் - பகைமை 23 - 12
செற்றம் - சினம்; பகை
நெடுங்காலம்நிகழ்வது 13 - 55
சேடி-வித்தியாதர ருலகு 17-21
சேண் - உயர்வு 3 - 106
சேண் - நெடுந்தூரம் 17 - 31
சேதா - செவ்விய பசு 5 - 130
சேதியம் - கோயில் 28 - 175
சேயரி - சிவந்தவரி 21 - 27
சேய்நிலம் - தூரமான இடம் 19 - 118
சேறல்-செல்லுதல்: அடைதல் 21 - 87
சேறல் - செல்லுதல் 16 - 103
சொரிதல் பொழிதல் 6 - 8
சொல்லின் மாத்திரம் -
சொல்லே பொருள் 27-72
சோழர்தம் குலக்கொடி
(பதிகம்) 23
ஞாயில்-மதிலின் ஓருறுப்பு;
குருவித்தலை 5 - 112
ஞாயிறு - சூரியன் (பதிகம்) 1
ஞாலம் - பூமி; உலகம் 19 - 17
ஞாழல் - புலிநகக் கொன்றை 8 - 6
ஞானதீபம்-அறிவுவிளக்கு 30 - 262
ஞெமிர்தல் - பரத்தல்;
பரந்து கிடத்தல் 18 - 44
தகரம் - மயிர்ச்சாந்து 4 - 55
தகைக்குநர் - தடுப்பவர் 23 - 36
தகை - நலம் 4 - 66
தக்கு-தக்கது; சிறந்தது 18-10
தடி-தசை; புலால் துண்டு 6-84
தடிந்து - வெட்டி 16 - 68
தணியா மன்னுயிர் 14-102
தண்டமிழ்ப் பாவை (பதிகம்) 25
தண்டம்-தண்டனை; ஒறுப்பு 13 - 6
தண்டாக் களிப்பு 6-126
தண்டு-கைத்தடி 14 - 30
தண்ணுமை-மத்தளம் 19 - 82 |
தண்பெயல்
- மழைவளம்;
குளிர்ந்த மழை பெய்தல்
என்பது பொருள் 14 - 74
ததர் - கொத்து 3 - 107
தத்துநீ ரடைகரை 8 - 3
தந்தித்தீ - யானைத்தீ என்னும்
கடும்பசி நோய் 17 - 44
தமர் - தமக்குரியோர்; தமக்குச்
சிறந்தோர் 13 - 75
தமர் - அன்பர் 10 - 36
தமனியம் - பொன் 19 - 114
தயங்கல் - விளங்குதல் 7 - 100
தயங்கிணர்க் கோதை 7 - 100
தருநிலை - கற்பகதரு நிற்குங்கோயில் 5 - 114
தருப்பை - தருப்பைப்புல்;
நாணற்புல் 23 - 13
தலைச்சாவகன் - முதல்
மாணாக்கன் 21 - 179
தலைத்தாள் - மிக்க முயற்சி 14 - 103
தலைமகன் - ஆசான் 3 - 97
தலைமடுத்தல்-தலையின்கீழ்
வைத்தல்; தலைக்குவைத்துப்
படுத்தல் 13 - 114
தலையெடுத்தாய் - நீக்கினாய் 22 - 103
தவத்திறம் பூண்டோள் 7 - 13
தவப்பெரு நல்லறம் 13 - 119
தவளமால்வரை - வெண்ணிறமுள்ள
பெரியமலை 15 - 3
தவளம் - வெண்மை 19 - 112
தவளம் - வெண்மை 3 - 117
தவா - அழியாத 30 - 55
தவா - அழியாத 9 - 53
தவ்வை - தமக்கை: முன்
பிறந்தவள் 7 - 104
தவ்வையர் - தமக்கைமார்
(பன்மை) 11 - 136
தளர்நடையாயம் 7 - 54
தளவம் - செம்முல்லை 3 - 163
தளவு - செம்முல்லை 19 - 93
தளை-கட்டு: கட்டுப்படுத்தும்
சிறைச்சாலை 15 - 63
தலைபிணி - பிணித்த
பிணிப்பு; விடாப்பிடி 18-68 |