தாக்ககணங்கு-தீண்டி
வருத்தும்
பெண் தெய்வம் 3 - 57
தாடி - மோவாய் மயிர் 3 - 116
தாதகிப்பூ - ஆத்திப்பூ 27-264
தாது - பூந்துகள் 4-20
தாது - மகரந்தப்பொடி 18-19
தாதை - தந்தை; பெற்றவன் 28-123
தாதை - தந்தை; பெற்றவன் 22 - 79
தாபதக்கோலம் - தவக்கோலம் 18 - 23
தாமம் - மாலை 19-112
தாமரைச் செங்கண் 4 - 94
தார்ச்சேனை 19 - 123
தாழைத்தண்டு-தாழையின்
அடிமரம் 20-62
தாழ்கண் அசும்பு 8 - 6
தாழ்தரல் - தங்குதல் 1 - 58
தாழ்தல் - தங்குதல் 5 - 9
தானம் - ஏழைகட்குக்
கொடுக்கும் கொடை 14-35
திகிரி - ஆணைச்சக்கரம் 22-16
திசைமுகக் கரு பிரமகண
பிண்டம் (பதிகம்) 28
திட்டாந்தம் - எடுத்துக்
காட்டு 29 - 57
திட்டிவிடம் - கண்ணில்
நஞ்சுடைய பாம்பு; அது
கண்ணாற் பார்த்தாலும்
உயிர்கள் சாகும் என்பர் 9-49
திணிதல் - சேர்தல் 22 - 45
திப்பியம் - வியப்பு: திவ்ய
மென்னும் வடசொற்
சிதைவு 15 - 70
திமிர்வோர்-தடவி உதிர்ப்போர்
19 - 86
திரணை உருண்ட வடிவம் 3-104
திரிதரல்-சுழலல்; சுற்றித்
திரிதல் 15 - 85
திரி தருதல்-சுற்றிக்கொண்டிருத்தல்
19 - 31
திரிதல்-ஒன்று மற்றொன்றாக
வேறுபடல் 27 - 22
திரு - அழகு 18 - 44
திரு - திருமகள் (இலக்குமி)
1 - 32 |
திருகி
- மிகுந்து 22 - 157
திருத்தக - செம்மையாக
29 - 275
திருந்தாச் செய்கை-இழிந்த
செய்கை 2 - 57
திருந்துமுகம்-இனியமுகம்
14 - 45
திருமலர் - அழகிய தாமரைப்பூ:
திருமகள் இருத்தற்குரிய
பூ என்றுமாம் 15-76
திருவில் - வானவில் 6 - 10
திருவிழை மூதூர் 3 - 34
திருவிழை - திருமகளும்
விரும்பும் 3 - 34
திருவின் செய்யோள் 5 - 4
திரை - அலை 8 - 5
திரைதவழ்பறவை-குளுவை
என்னும் பறவை: நீர் அலைகளில்
தவழ்ந்து செல்வது
என்பது பொருள் 8 - 28
திரைதோல் - சுருங்கிய
தோல் 20 - 44
திரையிரும் பௌவம் 7 - 33
திலகம் - திலகம்போல்வது ;
மேலானது 26-43
திலகம் - மஞ்சாடி 3 - 161
திறம் - இயற்கை 4 - 96
தீஞ்சொல்-இனியமொழி 4-122
தீத்துறு-தீபற்றிய 18 - 2
தீபதிலகை-தீவுக்குத் திலகம்
போன்றவள்: (மணி
பல்லவத்தில் புத்தன்
பாத பீடிகையை இந்திரன்
ஏவலாற் காவர்
செய்பவள்) (பதிகம்) 53
தீர்த்தன் - தூயோன் 5 - 98
தீவகச் சாந்தி - தீவிற்குச்
செய்யும் சாந்தி. (இந்திர
விழா) 1 - 35
தீவகம்-தீவு: கடல்நடுவில்
திட்டாகவுள்ள இடம் 21-87
தீவகம்-நாவலந்தீவு (பதிகம்) 4
தீவகம்-தீவு: தீவம்:
(அம்சாரியைபெற்றது) 21-90
தீவினை அறுக்கும் செய்தவம்
11-139
தூகள் - புழுதி 5-131 |