துகில்-மெல்லியஆடை
16-122
துக்கம் - துன்பம்: பிறப்பு
பிணி, மூப்பு, சாவு என்பன 25 - 4
துஞ்சுதல் - தூங்குதல் 13 - 8
துஞ்சு துயில்-மிக்க தூக்கம்
16 - 55
துடவை - தோட்டம் 13 - 87
துடி - இடைசுருங்குபறை:
உடுக்கு 7 - 69
துடிதலோகம் - தெய்வ
லோகம் ஆறனுள் ஒன்று 12-73
துடைக்கும் - நீக்கும் 23 - 6
துணிகயம்-தெளிந்தநீரினையுடைய
குளம்: ஊருணி
24 - 84
துணிச்சிதர் - கிழிந்த ஆடை
11 - 109
துணிபொருள் - மெய்ப்பொருள்:
தத்துவஞானம் 23-136
துணிவு - தாள அறுதி
(தாளத்தின் முடிவு) 2 - 19
தும்பி - வணடு 19 - 57
துயக்கு - குற்றம் 27 - 19
துயர் அறு கிளவி - இன்
சொல் 16 - 132
துய்ப்பு-நுகர்ச்சி; உண்டல்
15 - 46
துரகம் - குதிரை 7 - 99
துரப்ப செலுத்த 19 - 119
துருத்தி-ஆற்றிடைக்குறை:
(துருத்தி வடிவுபோல்
இருத்தலின் இப்பெயர்த்தாயிற்று) 1 - 65
துழத்தல் - துழாவுதல்;
கிண்டுதல் 7 - 71
துளங்கல் - நிலைகலங்கல்
(பதிகம்) 42
துளங்கல் - அசைதல் 18-48
துளங்கல் - நடுங்குதல் 4-86
துளங்காது-நடுங்காமல் 22 - 8
துறக்கம் - மேலுலக
இன்பம் 11 - 64
துறக்கம் - வானுலகம் 15 - 46
துறவு - துறவு: துறத்தல் 2 - 10
துன்ன வினைஞர் - தையல்
வேலை செய்வோர் 28 - 39 |
துன்னிய
- நெருங்கிய ;
சார்ந்த 17 - 16
துன்னுதல் - நேர்தல் 7 - 134
தூ பற்று: விருப்பத்துக்குக்
காரணமாகவுள்ளது 25 - 92
தூங்கு எயில்-அசைகின்ற
மதில் 1 - 4
தூங்குதல்-தொங்குதல் 6 - 51
தூசு - துகில் : ஆடை 20 - 68
தூணம் - தூண் 1 - 48
தூபம் - நறும்புகை 7 - 59
தூர்த்தர்-பரத்தர் : அயல்
மனையாள் இன்பந்துய்க்கும்
கழி காமுகர் 14 - 61
தூவாக்குழவி - உண்ணாத
குழந்தை 13 - 11
தெங்கு - தென்னை 3 - 98
தெய்வக்கரு-தெய்வக்கண
பிண்டம் (பதிகம்) 28
தெய்வக் கல் - தெய்வப்
படிமம் அமைத்தற்குரிய
கல் 26-89
தெய்வக்கிளவி - தெய்வத்தின்
மொழி 7 - 97
தெருட்டல் - தெளிவித்தல்
7 - 52
தெருமரல் - சுழற்சி; கலக்கம்
13 - 60
தெவ்வர் - பகைவர் 23 - 12
தெறுதல்-எரித்தல்: அழித்தல்
27-123
தெற்றி-வேதிகை திண்ணை
26 - 72
தேம் - அழகு 25 - 86
தேஎம்-தேசம்: நாடு 23 - 12
தேசம் - இடம் 27 - 23
தேர்ந்தனன்-தேடுவோன்;
ஆராய்ந்தறிவோன் 20 - 31
தேவகுலம் - கடவுளர்
கோயில் 26 - 72
தேறல் - மது; கள் 3 - 99
தேறு-தேற்றாங்கொட்டை,
தேற்றா விதை 23 - 142
தேறுதல் - தெளிதல் 21 - 142
தொகுதி - தொகுப்பு;
சேர்க்கை 24 - 136 |