தொக்குதல்
- ஒருமிக்கச்
சேர்தல்; ஒன்றுபடல் 14-25
தொடர்ப்பாடு - தொடர்பு;
ஒன்றுபடுதல் 21 - 98
தொடி - வீரவளை 19 - 78
தொடுகுழி-தோண்டப்பட்ட
பள்ளம் 16-25
தொடுப்பு-விதைப்பு 8 - 3
தொல் - பழமை 16-32
தொல் நிலை - பழமை 1 - 42
தொல்லோர் - முன்னையோர்
20 - 68
தொழுதகை மாதவன் 9 - 9
தொழுதல் - கும்பிடுதல் 19 - 78
தொழுவிளிப்பூசல் - துதிப்போர்
முழக்கம் 6 - 72
தொன்னிலை யுணர்ந்தோர்
1 - 42
தொன்று - பழமை ; முற்காலம்
10 - 65
தோகை - ஆண்மயில் 19 - 62
தோடு - பூவிதழ் 20 - 13
தோட்ட - துளைக்கப்பட்ட
18-135
தோட்ட - காதணி 3 - 118
தோப்பி-நெல்லாற் சமைத்த கள்
7 - 71
தோற்றம் - பிறத்தல் 24-107
தோற்றரவு - தோற்றம்;
பிறவி 26-107
தோன்றினன் - பிறந்தான் ;
22 - 221
நகர நம்பியர் - ஊரில் சிறந்த
காதலஞ் செல்வர் 19 - 24
நகுதல் நகைத்தல்; சிரித்தல்
24 - 23
நகுலம் - கீரி 19 - 96
நகை - பல் 20 - 49
நஞ்சுஎயிறு - நச்சுப்பல் ;
விடமுள்ள பல் 20 - 104
நடவை - வழி; வழிச்சேறல்
13 - 72
நடவை மாக்கள் - வழிச்
செல்லும் மக்கள் ; (தற்காலம்,
பிரயாணிகள் என்பர்)
14 - 62
நடுக்குறுதல் - நடுங்குதல் 7 - 110 |
நடுங்காநா-வழுவற்ற
சொல்
12 - 3
நடுநாள் - நடுஇரவு 7 - 63
நண்ணார் - பகைவர் 22 - 29
நந்தா விளக்கு - அழியாத
திருவிளக்கு 14 - 18
நயந்தோன்-விரும்பினோன் 5-88
நயம்பாடு - இனிமை 2 - 36
நரந்தம் - நாரத்தை 3-162
நரைமை - வெண்மை 20 - 44
நலத்தகை-நன்மைச்சிறப்பு 15-49
நல்கூர் நுசுப்பு 10 - 30
நல்கூர்தல்-வறுமையுறுதல் 19-4
நல்கூர்மேனி - இளைத்த
உடம்பு 13 - 72
நவை-குற்றம் 27 - 1
நவையறு நன்பொருள் (பதிகம்)
87
நளி-செறிவு : சேர்க்கை 12-92
நறுவிரை - நன்மணம் 19 89
நனவு - நேரில் நிகழ்வது 7 - 38
நன்பொருள்-மெய்ப்பொருள்
27 - 1
நன்னீர்ப் புணரி 6 - 78
நா - நாக்கு : வாயின் நடு
இடம்என்பது பொருள் 14-18
நா உள்ளழுந்தல்-இரைச்சல்
இடாதிருத்தல் 7 - 61
நாகநாடு - நாகரெனப்பட்ட
ஒருவகை மக்கள் வாழும்
நாடு 8 - 54
நாகம்-அரவு; நல்ல பாம்பு
7 - 131
நாகம் - சுரபுன்னை 3 - 162
நாகம் - நாகப்பாம்பு 20 - 98
நாடகம்-கதை தழுவிவருங்
கூத்து 19 - 80
நாடி - ஆராய்ந்து 21 - 122
நாணுத்தகவு - நாணுந்தகுதி
23 - 16
நாநல்கூர்தல் 10 - 34
நாப்பண்-நடுவண், நடுவில்
22 - 145
நாப்புடை-நாக்கின் அடி 23-16
நாமம்-பெயர் 27-23
நால்வேறு தேவர்-முப்பத்து
மூவராகிய தேவர் 1 - 37 |