அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
நாவாய்-மரக்கலம்; நீரின்
நடுவே இடந்தருவது
என்பது பொருள் 16 - 17
நாறுதல்-தோன்றுதல் 18 - 44
நாற்றம் - நன்மணம் 3 - 3
நிகர் - ஒளி 3 - 15
நித்திலம் - முத்து 19 - 112
நிம்பம் - வேம்பு 27 - 183
நிரப்பின்று எய்திய நீணிலம்
14 - 51
நிரப்பு - வறுமை 14 - 51
நிரப்புநர் - கொடுப்போர்
23 - 133
நிரயக்கொடுமொழி 6 - 167
நிரயம் - நரகம் 6 - 167
நிரைதார் - இணைந்த மாலை
ஒன்று சேர்ந்த மாலை 15-45
நில்லா - நிலைபெறா 22 - 135
நிவந்தோங்கு-மிகவுயர்ந்த 22-14
நிறை-மனத்தை அடக்குதல் 5-20
நிறை அழிதல் - காவலைக்
கடத்தல் 19 - 23
நின்மிதி-நியமிக்கப்படுதல் 30-37
நீத்தம் - வெள்ளம 12 - 80
நுகர்வு-இன்ப துன்ப நுகர்ச்சி 24 - 106
நுசுப்பு-இடை; மருங்குல் 9 - 7
நுழைபு-நுழைந்து; சென்று
4 - 5
நுனித்தனர்-ஆராய்ந்துரைத்தனர்
19 - 38
நெடியோன் - திருமால் 19-51
நெடுநிலை - மிகப்பெரிய 3-127
நெடுநிலை மண்ணீடு 6 - 47
செய்தல் - சாப்பறை 6 - 71
நெட்டிடை-நெடுந்தூரம் 8 - 17
நேமி - வட்டம் 13 - 57
நொசி தவம் - நுண்ணிய
தவம் 18 - 122
நொடி - பொருளொடு
புணர்ந்த நகைமொழி 22-62
நொடிதல்-சொல்லுதல் 13-50
நோற்றல்-துன்பம் பொறுத்தல்
2 - 47
நோற்றூண் வாழ்க்கை -
விரதங்களாற் பட்டினி
விட்டுண்ணும் வாழ்வு 18-122
நோன்பி - நோன்பையுடையவன் ;
தவநெறியுள்ளோன் 3 - 102
நோன்பு - தவம் 22-208
நோன்மை-பெருமை 17 - 65
நோன்றல்-பொறுத்தல் 7 - 50
பகர்தல் - விற்றல் 11 - 92
பகல் அரசு - பகற்பொழுதிற்கு
அரசு கதிரவன் 19-18
பகுவாய்-பிளந்தவாய் 17-77
பக்கம் - இடம்வலம் என்ற
பக்கங்கள் 27 - 255
பசலை-வேறுபட்ட நிறம் 5-140
பசிப்பு - பசி: உணவின்றி
வருந்துகின்ற நிலை 14 - 58
பசுங்கால் - பசியதண்டு 19 - 75
பசுமிளை-பசியகாவற்காடு 28-25
படப்பை-பக்கம்; தோட்டம்
25 - 16
படர்தல் - செல்லுதல் 11-145
படி - பூமி 19 - 52
படிமை-வடிவம் ; (தெய்வ
வடிவம்) 3 - 37
படிவம்-தெய்வ வடிவம் 3-128
படிறு - பொய்; உண்மையல்லாதது 18 - 110
படிறு உரை - பொய்ச்
சொல் 21 - 101
படுத்து - அடக்கி ; உள்ளடக்கி
16 - 25
பட்டவை - உண்டாகுந்
துன்பங்கள் 23 - 6
பட்டிமண்டபம் - கலையறி
நிலையம் (ஆராய்ச்சிக்
கூடம்) 1 - 61
பணை-பந்தி; கிளை 7 - 117 - 8
பணை-பறை; முரசு 19 - 18
பணைமுகம்-பெரிய முகம் 4-36
பண்டு - முன்பு 21 - 31
பண்ணியம் - இசைகளின்
ஒலி; பலவகைப்பண்டம்
7 - 123 - 4
பண்ணியாழ்த் தீந்தொடை 7-46
பண்பில் காதலன் 7 - 50
பண்பில் கிளவி - பயனற்ற
சொல் 3 - 106