அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
பண்பு-இனிமை; அழகு 6 - 118
பண்பு-சிறப்பு; தன்மை 1 - 2
பண்பு-அன்பு 7 - 50
பண்புகொள் யாக்கை 6 - 118
பதியகம் - நகரிடம் 19 - 41
பத்தி - வரிசை 1 - 48
பந்தர்-பந்தல்; காவணம் 19 - 60
பயந்தோய்-பெற்றோய்: (முன்னிலை
யொருமை) 23 - 100
பயந்தோர்-தாயர்; அன்னையர்
21 - 152
பயம்-பயன் (பிரயோசனம்) 3-78
பயன் - தமக்குவேண்டும்
பொருள்கள் 18 - 108
பயிர்க்குரல்-விளியோசை :
கூப்பிடும் ஒலி 23 - 116
பயிர்தல்-அழைத்தல் 6 - 75
பரசினர்-வணங்கினர் 12 - 109
பரசுதல்-வணங்குதல் 27 - 88
பரதம்-பரதகண்டம் 18 - 57
பரத்தமை-பரத்தன் தன்மை,
பரத்தையை மருவி ஒழுகுவோன்
7 - 50
பரப்புதல் - பார்த்தல் 4 - 94
பரப்புநீர்-மிக்க நீர்; மிகுதிப்பட்டுப்
பரவியுள்ள நீர் 14-52
பரம அணு-மிக நுண்ணிய
அணு 27 - 126
பரவுதல் - வணங்குதல் 12-38
பராவல் - வழுத்துதல்;
வணங்குதல் 9 - 47
பரி - குதிரை 18-113
பரிதல்-அறுபடுதல் 19 - 85
பரிதியஞ் செல்வன்-ஆதித்தன்;
ஞாயிறு 4 - 1
பரிபுலம்பினன்-மிக்க வருத்தங்கொண்டான்
16 - 57
பரியல்-வருந்தாதே: (முன்னிலை
ஏவல் ஒருமை) 12 - 50
பரிவு - இரக்கம் 15 - 66
பரிவுறு மாக்கள்-துன்புற்ற
மக்கள் 15 - 66
பலர்தொழு-படிமையன் 3-37
பலிமுன்றில்-பலிபீட முன்
இடம் 6 - 52
பல்வேறு சமயப் படிறு 10 - 77
பவத்திறம்-பிறப்புக்கு ஏதுவாகிய
குற்றம் 30-264
பவம்-நல்வினை தீவினைகளின்
பயன் தருகின்ற முறைப்படி
சார்தல் 24 - 107
பவளக்கடிகை-பவளத் துண்டம்
20 - 75
பழஞ்செருக்கு - முதிர்ந்த
களிப்பு 7 - 72
பழுதில்காட்சி-குற்றமற்ற
அறிவு 10 - 70
பழுநிய - முதிர்ந்த 3 - 28
பழுநிய பாடல்-இசை முற்றிய
பாட்டு 19 - 84
பழுமரம்-ஆலமரம்; பழுத்த
மரம் 14 - 26
பளிக்கறை-பளிங்கு மண்டபம்
5 - 84
பளிதம் - கற்பூரம் 28 - 243
பறந்தலை-பரந்து கிடக்கும்
பாழிடம் 6 - 96
பறந்தலை-புறங்காடு; சுடுகாடு
18 - 62
பறா அக் குருகு - பறவாத
குருகு: கொல்லன் உலை
மூக்கு 19 - 28
பற்றற முயல்வோர்-அகப்
பற்று புறப்பற்றுக்கள்
கெடும்படி முயற்சி செய்வோர்
14 - 41
பற்றாமாக்கள்-பகைவர் 1 - 62
பற்று - புலன்களைப் பற்றிக்
கொள்ளுதல் 24 - 107
பன்னிறப் புள்ளினம் 8 - 31
பாகு - யானைப்பாகன் 4 - 36
பாங்கு - பக்கம் 8 - 35
பாங்கு - உரிமை 21 - 173
பாங்கு - பகுதி: பகுக்கப்படுவது
27 - 78
பாசடை-பசிய இலை 4 - 8
பாசடைப் பரப்பு 4 - 8
பாசவர்-வெற்றிலை விற்போர்
28 - 33
பாசறை-பாடிவீடு; போர்க்களம்
8 - 32
பாசிலைத் திரையல் - பசிய
வெற்றிலை 28 - 243