அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
பாடகம்-காலிலணியும் ஒரு
வகை அணி 25-85
பாடு - ஒலி 17-50
பாடுகிடத்தல்-வரம்வேண்டிக்
கிடத்தல் 18-158
பாடை - மொழி 16-60
பாடைமாக்கள் - மொழி
வேறுபட்ட மக்கள் (பல்
வகை மொழி பேசும் பல
வேறு நாட்டினர்) 1-16
பாணி - கைகள் 27-237
பாண்டு கம்பளம் - வெண்
ணிறக்கம்பளம் (பாண்டு-
வெண்ணிறம்) 14-29
பாத்தியன் அடியான் 10-35
பாத்திரம்-கடிஞை; பிச்சை
ஏற்கும் கலம் 14-77
பாத்தூண்-பகுத்து உண்டற்குரிய
உணவு (பதிகம்) 64
பாயல்கொள் நடுநாள் 7-63
பாயல்கொள்ளல்-தூங்குதல் 7-63
பாயற்பள்ளி-படுக்கை இடம் 16-29
பாயுரு - எருவாய் 27-237
பாரகம் அடங்கலும் பசிப்
பிணி அறுக 16-134
பாரமிதை - வீடு பேறாகிய
கரையை அடைதற்குரிய
பத்துவகைகள் 26-45
பார்ப்பார்க் கொல்வாப்
பண்பு 13-80
பாலிகை-முளைப்பாலிகை 1-44
பால் - பகுதி 1-38
பாவனை-கேட்டவாறு நடத்தல் 30-258
பாவை - திருமகள் ஆடல்:
பதினொருவகை ஆடல்களுள்
ஒன்று 5-4
பாவை - ஒவியம் ; பாவை
போலுள்ள மணிமேகலை 30-264
பாவை விளக்கு - பாவை
கையிற்கொண்டுள்ளதாக
அமைத்த விளக்கு 1-45
பான்மை-முறைமை 23-47
பான்மை-தன்தன்மை 18-110
பான்மை-வயம்; இயற்கை 16-96
பிக்குணிக்கோலம் - பிச்சை
கொண்டு உண்ணும்
துறவு வடிவம்; (பிக்ஷுணி
என்னும் வடசொற்
சிதைவு) 15-58
பிசி-பொருளொடு புணராப்
பொய்ம்மொழி 22-62
பிஞ்ஞை-நப்பின்னை 19-65
பிடகநெறி - புத்தனருளிச்
செய்த ஆகமங்களின் வழி 26-66
பிடவம் - குட்டிப்பிடவம்
என்னும் கொடி 3-163
பிடித்த கல்விப் பெரும்புணை 11-77
பிணங்குதல்-நெருங்குதல் 6-151
பிணங்கு நூல் மார்பன் 6-151
பிணவு-பெண்; பெட்டை 16-68
பிணவுக் குரங்கு - பெண்
குரங்கு 19-72
பிணித்தல் - வசப்படுத்துதல் 16-70
பிணிப்பு-பற்று; பாசம் 21-16
பிணிப்போர்-கட்டுவோர் 19-88
பித்தை - குடுமி 22-149
பிரத்தியம் - காட்சி; நேரில்
அறிவது 27 - 83
பிரமாண ஆபாசங்கள் -
அளவைகட்குப் பொருந்தாதவைகள் 27 - 87
பிழையா விளையுள் 11 - 91
பிறகிடுதல்-பின்னே இருக்கும்படி
கடந்து செல்லுதல் 22-102
பிறங்கல் - மலை 16 - 53
பிறர்க்குரியாளன் 5 - 73
பிறர்நெஞ்சு புகாஅர் - ஏதிலார்
உள்ளத்தில் புகுதல்
இலர் 22-46
பிறழ்தல்-மாறுபடுதல் 18-112
பிறை - வளைவு 6 - 61
பின்நிலை - தாழ்ந்து நிற்றல்
(பதிகம்) 19
பீடிகை-பீடம் ; ஆசனம் 3 - 66