அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
பெற்றிமை-தன்மை; இயல்பு 21-161
பேடி - அலி; ஆண் பெண்
இயற்கையற்றது 3-125
பேடு-பதினொருவகை ஆடலுள்
ஒன்று 3-125
பேடை-பெட்டை;பெண் 19-62
பேணல்-வணங்குதல் 22-64
பேது - அறியாமை 6-151
பேதைமை-மயங்கிக் கண்டது
மறந்து கேட்ட
பொய்யை மெய்யெனத்
தெளிதல் 24-105
பைஅரவு-படத்தையுடைய
நாகப்பாம்பு 19-11
பைஞ்சேறு-பசிய சாணம் 19-115
பைதல்மாக்கள் - துன்பமுடைய
மக்கள் 17-93
பொங்கர்-கட்டுமலை; செய்
குன்று 4-93
பொங்குநீர் - விளங்குகின்ற
கடல் (பதிகம்) - 14
பொடித்தல்-அரும்பல் 18-40
பொதியறை - புழுக்கறை;
சிறு துவாரமு மின்றி
மூடப்பட்ட கீழறை 19-8
பொதியறைப்பட்டோர் 4-105
பொதியில் - பொதுஇல்:
பலருக்கும் பொதுவான
இடம்;அம்பலம்:(பொதுவில்
என்பது பொதியில்
என மருவியது) 20-15
பொதுஇயல் - எல்லோர்க்கும்
ஒப்ப ஆடுங்கூத்து 2-18
பொதும்பர் - இளமரக்கா;
சோலை 4-5
பொதுவர் - பொதுமகளிர்;
கணிகையர் 28-51
பொத்துதல்-மூட்டுதல் 2-42
பொய்உரு - பொய்வேடம்
(பதிகம்) - 91
பொய்யாறு-பொய்நெறி 23-22
பொருவறு சிறப்பு 8-62
பொருளுரை - மெய்யுரை;
முனிவர் புரிந்து கண்ட
பொருளுடன் குடிய
வுரை 2-61
பொருள் - தத்துவம் (உண்மைப்
பொருள்) 1-60
பொருள் விலையாட்டி -
பொருள் தருவார்க்குத்
தன்னை விற்கும் விலை
மகள் 5-87
பொல்லாக்காட்சி - மயக்க
அறிவு 24-129
பொறி - புள்ளி 19-68
பொறிமயிர் வாரணம் 7-115
பொறை - சுமை; பாரம் 9-13
பொறை யுயிர்த்தல்-இளைப்பாறுதல்
24-165
பொற்றொடி-மாதர் நற்றிறம் 12-33
பொன்வாகை -பொன்னாற்
செய்யப்பட்ட வெற்றி
மாலை 26 - 90
பொன்றக்கெடாஅ-முழுதும்
கெடாத 30-223
போக்கப்படுதல் - விலக்கப்
படுதல் 13-44
போதி - அரச மரம்
போதத்தை (அறிவை)த்
தருவதென்பதுபொருள் 12-101
போதிகை - தூண் 19-111
போது - மலர் 4-19
போதுவர்-அடைவர்(செல்வார்) 1-41
போந்து - வந்து 22-88
போந்தோர்-வந்தோர் 16-18
போழ்தத்து-பொழுதின்கண் 15-26
போழ்நர்-அறுப்பவர் 28-44
போழ்ந்து-பிளந்து: கீறி 23-13
போற்றுதல்-பாதுகாத்தல் 12-45
பௌவம் - கடல் 7-33
மகரம் - மகரமீன் 29-15
மகள் - மனைவி 21-30
மகன் - கணவன் 21-29
மங்கலமொழி-நன்மொழி;
அறமாகிய சொற்கள் 30-261
மங்கலம் - நன்மை 10-83