அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
மஞ்சு - மேகம் 16-54
மஞ்ஞை - மயில் 19-68
மடல் - இதழ் மட்டை 20-57
மடவோர் - அறிவிலிகள் 6-104
மடிதல் - இறத்தல்; கீழ்
விழுதல் 14-75
மடுத்தல் - உட்கொள்ளல்;
மிகுதி 12-120
மடை - சோறு 6-87
மடைக்கலம் - சோற்றுப்
பாத்திரம் 21-56
மடையன் - சோறுசமைப்
போன் 21-56
மட்டு - தேன் 4-63
மணி - பளிங்கு 4-7
மணி - நீலமணி (நீல இரத்தினம்) 4-44
மணிபல்லவம் - காவிரிப்பூம்
பட்டினத்துக்குத்தெற்கே
யுள்ளதொரு சிறுதீவு
(பதிகம்) - 44
மணிவினைஞர் - முத்துக்களைக்
கோப்போர் 28-45
மண் - அணு 22-45
மண்கணை - மார்ச்சனை:
பேரொலி 6-119
மண்டு அமர் - மிக்க போர் 18-140
மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட
பாவை 18-156
மண்ணுதல் - கழுவுதல்
(குளித்தல்) 3-91
மதலை - கொடுங்கை 1-53
மதனின் நெஞ்சம் 6-206
மதி - திங்கள்: மாதம் 24-42
மதியோர் - அறிஞர் 20-14
மந்தி - குரங்கு 4-6
மம்மர் - மயக்கம் 22-128
மயக்கு - கலக்கம் 21-23
மயங்குகால்-சுழல் காற்று;
கடுங்காற்று 4-34
மயரி - மயக்கமுடையோன் 22-75
மயல் - மருள்: பித்து 23-41
மயற்பகை - பித்தேற்றும்
மருந்து 23-92
மயிலை-மல்லிகை 24-38
மரபு - முறைமை 3-79
மரப்பந்தர் - சோலை 3-44
மரவம் - வெண்கடம்பு 3-160
மராஅம்-வெண்கடம்பு 19-76
மருகன் வழித்தோன்றல் 4-108
மருங்கு-குலம்; வழிமுறை 22-25
மருத்துவி-மருந்தினையுடையாள் 17-15
மருள் - இருட்சி; இருட்டு
நிறம்; கருநிறம் 3-116
மருள் - மருட்கை; வியப்பு 4-2
மருள் - ஒத்த: (உவமவுருபு) 4-27
மருள் - மயக்கம்: அறிவு
கெட்ட நிலை 12-98
மலர்கதிரோன்-பரந்தகதிர்
களையுடைய பரிதிவானவன்:
சூரியன் 21-190
மலர்கதிர் மண்டிலம் 6-2
மலர்க்கணை மைந்தன்-மன்மதன்:
மலர்களை அம்பாக
வுடையவன் 19-100
மலர்தலை-அகன்ற இடம் 12-75
மலைக்கும் - வருத்தும் 14-6
மலைதல்-மாறுபடுதல் 30-261
மலைத்தல் - போர்செய்தல் 19-123
மல்லல்-வளப்பம் 23-132
மழலை வண்டினம் 4-4
மழுவாள் நெடியோன்-பரசுராமன் 22-25
மழை - மேகம் 20-22
மறம் - பாவம் 21-20
மறம் - வெற்றி (பதிகம்) - 71
மறவணம்-பாவத்தன்மை 2-60
மறவர் - வீரர் 26-82
மறித்து - மீட்டும் 10-88
மறுகு - தெரு: வீதி 15-71
மறுமை - மறுபிறப்பு 3-66
மனப்பாடு மனத்திடம் 21-171
மனமாசு-மனவிருள்; திரிபான
எண்ணம் 22-94
மன்பதை-உயிர்ப்பன்மை:
உயிர்ப் பொருள்களின்
தொகுதி 23-16