அருஞ்சொல் பொருள் அகவரிசை

அருஞ்சொல் காதை   -   அடி அருஞ்சொல் காதை   -   அடி
வெவ்வினை-கொடுஞ்செயல் 20 - 125
வெள்ளில் - விளாமரம் 6 - 85
வெள்ளைமகன் - விரகில்லா
தவன் : வஞ்சமற்ற மகன் 14 - 36
வெறி - ஆடு 19 - 97
வேக வெந்திறல் நாகம் 9 - 58
வேட்டது-விரும்பியது 18-142
வேட்டல்-விரும்புதல் 20 - 95
வேட்டம் - வேட்டை 18 - 168
வேட்டனை-விரும்பினாய் 25-113
வேணவா வேட்கை; ஆசை
மிகுதி (பதிகம்) - 18
வேணவாத் தீர்த்த விளக்கே
(பதிகம்) - 18
வேதாளிகர் - நாழிகைக்
கணக்குக் கூறுவோர் 28 - 50
வேதிகை - திண்ணை 1 - 48
வேத்தவை - வேந்தவை :
வலித்தல் விகாரம்.
அரசர் பேரவை யென்
பது பொருள் 28 - 118
வேத்து இயல் - அரசர்க்கு
ஆடுங்கூத்து 2 - 18
வேய் - மூங்கில் 20 - 58
வேலை - வேளை : பொழுது ;
காலம் 21 - 54
வேலைபிழைத்தல் - காலந்
தவறுதல் 21 - 58
வேழம் - யானை 20 - 95
வை - கூர்மை 8 - 42
வைகுஇருள்-தங்கிய இரவு 20 - 88
வைதிக மார்க்கம்-வேதநெறி 27 - 3
வைவாள் - கூரியவாள் 21-23
வௌவ-கவர ; கொள்ள 16-13