பல மொழிந்தாள். அதுகேட்ட
உதயகுமரன் "மணிமேகலையே காய சண்டிகை உருவில்இருக்கின்றாள் ' தன் மாயவித்தையால்
என் மனத்தை மயக்குறச் செய்கின்றாள். இவளை நள்ளிருள் யாமத்துப் போந்துகொண்டேகல்
வேண்டும்" என்னுங் கருத்தினனாய் மீண்டோன் கருதியவாறு வந்து விஞ்சையனாற்
கொல்லுற்று மாண்டொழிகின்றான்.
3. ஆபுத்திரன்: இவன் இளம்பூதியென்னும் அந்தணனுக்கு வளர்ப்பு மகனாக
வளர்ந்தவன் ; பல்வகை அறநூல்களையும் கற்றுணர்ந்தவன் ; ஒருநாள் மறையோர்
வேள்வியிற்கொலை செய்தற்குக் கொணர்ந்திருந்த பசுவைக் கண்டு மனமிரங்கி
அதனை உயிர் பிழைத்தற்கு இரவில் கொண்டு செல்லுங்கால் அந்தணர் கண்டு அவளைப்
பலவாறு ஏசினர். அதற்கு அவன், பசுவினால் வரும் நலத்தை அவர்கட்கு எடுத்துக்
கூறி விடுவிக்க முயன்றான் ; அதனால் அவன் உயிர்கள்பாற் கொண்டுள்ள அரிய
இரக்கமும் அறிவும் புலனாகின்றன.
பின் இவன் மதுரைக்குச் சென்று தெருக்கள்தோறும் ஐம்மேற்றுக் காணார் கேளார்
முதலிய யாவர்க்கும் உணவூட்டும் பேரறஞ் செய்தலும், அங்குள்ள சிந்தாதேவி
என்னும் கலைமகள் கோயிலில் தங்கியிருத்தலும் இவன்றன் அரும்பெருங் குணங்களாகும்.
ஒருநாள் நள்ளிரவுப்போதில் நெடுந்தொலை நடந்து களைத்துப் பசி கொண்டிருந்தோரைக்
கண்டு இவன் வருத்தங்கொள்ள, அதுகண்ட சிந்தாதேவி அமுதசுரபி என்னும் கடிஞை
யுதவ, அதனால் அவர்கட்கு அமுதூட்டி மகிழ்தலும், சிந்தாதேவியை வணங்குதலும்
கற்போர்க்கு இன்பங் கொடுப்பதாகும்.
பின்பு சாவகநாடு வறுமையால் வாடுதலறிந்து அங்கே வங்கமேறிச் செல்லுங்கால்
வங்கமாக்களுடன் மணிபல்லவத்தீவில் இறங்கித் தங்கியிருந்தான். அவர்கள்
போகுங்கால் இவளை ஆங்குவிட்டு ஏகினர். இவன் வறுமையால் வாடும் சாவக நாட்டு
மக்கட்கு உணவளிக்கும் அறம் தனக்குத் கிட்டா திருப்பதையறிந்து மனம் வருந்தி
மணிபல்லவத்தில் எவரும் இல்லாமையால். 'யாவர்க்கும் உணவூட்டும் இப் பாத்திரம
இருந்து என்ன பயன்? நான்மட்டும் வாழ்ந்து யாது நலம்?' என்று உண்ணா நோன்புகொண்டு
இறந்தனன்.
ஆபுத்திரன் பின்பு சாவகநாட்டில் பசுவயிற்றிப் பிறந்து பூமிசந்திரனால் வளர்க்கப்பெற்றுப்
புண்ணியராசன் என்னும் பெயருடைய அரசனாகின்றான், அதுகாலை மணிமேகலை தருமசாவகன்
என்னும் முனிவன் தவப்பள்ளிக்குச் செல்கின்றாள். அங்கே ஆபுத்திரன் இவளைக்
கண்டு வினவியபோது இவளை வரலாற்றை அங்கு நின்ற கஞ்சுகன் ஒருவன் கூறுகின்றான்.
அப்பால் இவன் பழம்பிறப்பை உணர்த்தலும், அதனால் மனம் மாறுபட்டு, அரசுவுரிமை
முதவியவற்றைத் துறந்து,
"என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
நன்னுதல் உரைத்த நல்லறஞ் செய்வேன்"
என்று நன்றி கூறுகின்றான். இக்காரணங்களால் இவன் அறஞ்செய்வதே சிறந்ததென்னும்
கொள்கையுடையவன் என்பது தெளியப்படுகின்றது.
4. அறவண வடிகள்: இவரின் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகின்றது.
கோவலன் கொலையுண்டது கேட்டு வருந்திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும்,
சீலம் ஐந்தும் உணர்த்திக் தவக்கோலம் பூணச் செய்தவர். மணிமேகலை, உதயகுமரன்
வெட்டுண்டதன் காரணமாகச்
|