அதனை இவன் தான் ஒருவனாகவே
அடக்கி யொடுக்கினான் இதனால் இவன் ஆண்மை நன்கு புலனாகின்றது. இவனுக்கு
மணிமேகலையிடத்துப் பெருங்காதலுண்டு அவள் மலர்வனஞ் சென்றபோது, அங்கே சென்று
மணிமேகலை இளமை நலங்கனிந்திருக்கும் வனப்பின் திறத்தை அவளின் தோழியாகிய
சுதமதியிடம்.
"............மடந்தை
மெல்லியல்
தளரிடை அறியும் தன்மையன்
கொல்லோ
விளையா மழலை விளைந்து
மெல்லியல்
முளையெயி றரும்பி முத்துநிரைத்
தனகொல்
செங்கயல் நெடுங்கண் செவிமருங்
கோடி
வெங்கணை நெடுவேள் வியப்புரைக்
குங்கொல்
மாதவர் உறைவிடம் ஒரீ
இமணி மேகலை
தானே தமியள்இங்கு எய்தியது
உரை" (4: 97 - 104)
என்று வியந்துரைக்கும் தன்மையால் மணிமேகலையால் காமங் காழ் கொண்டமை
நன்கு விளக்கப் பெறுகின்றது.
பின்னர், அவன் மணிமேகலா தெய்வத்தால்,
"தவத்திறம் பூண்டோள்
தன்பால் தெய்வத்தால்,
அவத்திறம் ஒழிக" (7:
13 - 4)
என்று கூறி முன்னறிவிப்புக் கொடுத்திருந்தும் 'கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக்
கடக்கலாமோ' என்றவாறு சித்திராபதியின் சொல் நயத்தால் காமம் நீங்காதவனாய்ப்
பிச்சைப் பாத்திரம்ஏந்தி இல்லோர்க்குதவும் நல்லறம் செய்யும் மணிமேகலையிடம்
போந்து,
"நல்லாய் என்கொல் நற்றவம்
புரிந்தது
சொல்லாய்" (18:
126 - 7)
என்று துணிந்து கேட்கின்றான். இதனால் இடங்கழி காமமோடு அடங்காத நிலை
இவன்பால் நன்கு வெளியாகின்றது.
பின்பு அவள் காயசண்டிகை வடிவு தாங்கிச் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாகச்
செய்து, அரும்பசியால் வாடிய யாவர்க்கும் உயிர் மருந்தாகிய சோறளித்துக்கொண்டிருப்பதைக்
கேள்வியுற்று, அவள் பால் காழ்கொண்டெழுந்த காமவேட்கை மீதூர்ந்தெழுந்து
பொங்க, நிறை பொறை ஓர்ப்புக் கடைப்பிடி முதலிய ஆடவரக்குள்ள அரும் பெருங்
குணங்களெல்லாம் கெட்டொழிய அவள் மெய்யுறுமின்பம் கிட்டாதொழியினும் அவளுடைய
செய்ய வாய்மொழியேனும் கேட்கலாமென விழைந்து,
"............தோட்டார்
குழிலியை
மதியோர் எள்ளினும் மன்னவன்
காயினும
பொதியில் நீங்கிய பொழுதிற்
சென்று
பற்றினன் கொண்டுஎன் பொற்றேர்
ஏற்றிக்
கற்றறி விச்சையும் கேட்டு
அவளுரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்"
(20: 13 - 8)
என்று எண்ணி உலகவறவியின் ஊடுசென்றேறிச் சென்றான்.
இவன் வருகை கண்ட மணிமேகலை, இவன் காதற்குறிப்பை அறிந்து இவன்பால் வந்து,
அதனை மாற்ற எண்ணித் தக்க நல்லுரை
|