சிந்தாமணி என்பது தேவருலகத்துள்ள பொருள்களில் ஒன்று. அது தன்பால் வந்து இரப்பார்க்கு வேண்டும் பொருள்களை யாண்டும் வழங்கும் இயல்புடையது. காமதேனு, கற்பகதரு, சங்கநிதி, பதுமநிதி இவையும் அப் பண்புடையன என இலக்கியம் கூறும். பொன்னுலகத்துப் புவேண்டும் கல்விப் பொருள்களை இரவாமல் வேண்டியபோது கண்டு எடுத்துக் கொள்லவர்க்கு வேண்டும் பொருள்களை வழங்குவதற்கு மேற்காட்டிய ஐந்து பொருள்களும் ஆங்கு உள்ளன. மண்ணுலகத்துப் புலவர்க்கு வதற்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஈங்கு உள்ளன. வளையாபதியும் குண்டலகேசியும் இன்னும் வெளிப்பட்டில. சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றும் டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் பெரு முயற்சியால் வெளிவந்துள்ளன. மூன்றினும் முதன்மையுடையது சிந்தாமணியே. முன்வைத் தெண்ணப்படுவதும் அதுவே. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சிறந்தன எனினும் இத்துணை விரிந்த நூல்கள் அல்ல. பெருங்காப்பியச் சுவை நிறைந்த நூலாகப் புலவர் பலராலும் போற்றப்படுவது சிந்தாமணி யென்னும் சிறந்த நூலேயாகும் என்பது தெளிவு. சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு மணி. இப்பெயர் இந்நூலிற்கு அமைந்ததற்குப் பல காரணம் இருப்பினும் ஒளிகெடாத ஒரு மணி போன்றது என்ற காரணமே இந்நூலுக்குப் பொருத்தமாகும். இந்நூல் தோன்றிய காலமுதல் புகழ் குன்றாதுநின்று நிலவுவதே அதனை யுணர்த்தத் தக்க பெருஞ் சான்றாம்.
இந்நூல் நாமகள் இலம்பகத்தை மட்டும் முதலில் கி.பி. 1868 இல் ரெவரெண்ட். எச். பவர் என்பவர் பதித்து வெளியிட்டனர். பின்னர் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம் என்ற மூன்றும் நச்சினார்க்கினியர் உரை, பதவுரையுடன் சோடசாவதனம் தி. க. சுப்பராய செட்டியார் அவர்களாற் பதித்து வெளியிடப்
|