அணிந்துரை
சீவக சிந்தாமணி என்பது செந்தமிழ் மொழியிற் சிறந்து திகழும் பழம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. பழைய காப்பியங்களிலே சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் இந்த ஐந்து காப்பியங்களையும் ஒருங்கே எண்ணி இவை ஐம்பெருங் காப்பியங்கள் என்று கூறுவாரும் உளர். ஐம்பெருங் காப்பியங்களுள்ளும் சிந்தாமணியையே முன்னிறுத்தி எண்ணியதன் நோக்கம் இவற்றுள்ளும் சிந்தாமணி தலைசிறந்ததாம் என்னும் கருத்தேயாதல் வேண்டும். காலத்தானோக்கின் சிலப்பதிகாரத்தையே முற்பட வைத்தல் வேண்டும்.
சிந்தாமணி என்பது இந்நூற்குத் தன்மையால் வந்த பெயர் என்பர் இலக்கண நூலோர். சிந்தாமணி என்பது நெஞ்சின்கண் பொதிந்து வைத்தற்குரிய சிறப்புடையவொரு மணி போல்வது என்னும் பொருட்டு. புலனுழுதுண்போராகிய நல்லிசைப் புலவர்கட்கு வேண்டும் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே வழங்கும் பெற்றியுடையதாதலின் இப் பெருங் காப்பியத்தைச் சிந்தாமணி என்று போற்றுவது மிகவும் பொருத்தமே. இந்நூலின் கதைத்தலைவனாகிய சீவகனுக்கு அவனுடைய நற்றாயாகிய விசயமா தேவியார் முதன் முதலாக இட்டுவிளித்த பெயர் சிந்தாமணி என்பதேயாம். சீவகன் என்னும் பெயர் பின்னர் வானொலியாகத் தோன்றிய 'சீவ' என்னும் சொற்கொண்டு கந்துக்கடன் என்னும் வணிகனால் இடப்பட்ட பெயராகும். எனவே சிந்தாமணி என்னும் பெயரை ஆசிரியர் முதன்மையாகக் கருதி இந் நூற்குச் சிந்தாமணியின் சரிதம் என்றே பெயர் வழங்குவாராயினர்.
"செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொள
அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்
சிந்தா மணியின் சரிதம்சிதர்ந் தேன்றே ருண்டார்
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே"
என்பது திருத்தக்கதேவர் திருமொழி
இனி இந்நூலின்கண்
சீவகன் மணந்து கொண்ட மகளிரின் வரலாறு கூறும் பகுதிகளை அவ்வவர் பெயரோடு கூட்டிக்
காந்தருவதத்தையார் இலம்பகம் என்பன போன்று பெயர் கூறினாற் போன்றே சீவகன்
சிறப்பிற்குக் காரணமான கலைசெல்வம் நிலம் வீடுபேறு முதலிய நலங்களையும் மகளிராகவே
உருவகஞ் செய்து நாமகள் முதலிய மகளிர்களையும் சீவகன் மணந்துகொண்டதாகத் தேவர்
யாண்டும் இந்நூல் திருமணகதிருமொழி.
|