நிற்றலின், 'அழகு' என்னும் வனப்பையும், 'இழு' மென்னும் இனிய ஓசையமைந்த மொழியாலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு விழுமிய பொருள்களையும் உணர்த்திச் செல்லுதலின் 'தோல்' என்னும் வனப்பையும் தன்கண் உடையதாகும் என்றுணர்க.
இந்த வனப்பினுள் வைத்தும், 'அழகு' என்னும் வனப்பிற்கு இச் சிந்தாமணிக்கு நிகர் சிந்தாமணியே யாகும். அழகு என்பது "செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்" எனப்படும் செய்யுண்மொழி தேர்ந்து சீர்புனைந்து தொடை செய்யும் ஒரு செயற்றிறமேயாகும். 'செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல்' என்று சொல்லுக்கு அடைதேர்ந்து தொடுத்த கம்பநாடரும் சிந்தாமணியின் செஞ்சொற்றொடை நினைந்தே இங்ஙனம் இனிதே மொழிந்தனர் என்று கருத இடனிருக்கிறது. கம்பநாடர் இயற்றிய பெருங்காவியம் ஏனைக் காவியங்களினும் சிறந்திருத்தற்குக் காரணம் சிந்தாமணியிற் கண்ட இத் தீஞ்சொற் காவியநடை அவர்க்கும் கைவந்தமையே தான். எனினும் கம்பநாடர் புனையும் செஞ்சொற்றொடையின்பஙகூட இந்தச் சிந்தாமணியின் செஞ்சொற்றொடையின்பம் அளவு உயர்ந்து விடவில்லை. இவ்வகையிலே சிந்தாமணி தரும் செஞ்சொற் றமிழ்நடை யின்பத்தை வேறு எந்தக் காப்பியத்தினும் கண்டு நுகர்தல் இயலாது. அத்தகைய பேரின்பந் தருவன தேவருடைய செய்யுணடை. இவ்விடத்தில் எடுத்துக் காட்டாக இன்பமே ததும்பி வழியும் தேவர் செய்யுணடையிலே ஒரு சில எடுத்துக்காட்டி மேற்செல்வாம். சிந்தாமணியின் சிறப்பிற்குத் தலைசிறந்த காரணமும் இதுவேயாகும். உலகம் 'மூவா முதலாவுலகம்,' மழைத்தாரை 'வெள்ளிவெண் கோனிரைத் தனபோற் கொழுந் தாரைகள்,' மாந்தர் 'தேர்ந்தநூற் கல்வி சேர் மாந்தர்,' துகில், 'ஆவியன்ன பூந்துகில்,' 'நுரைகிழித்தனைய நொய்மை நுண்டுகில்,' 'பாலாராவிப் பைந்துகில், பீடு பெண்வலைப்படாதவர் பீடின் ஓங்கிய அண்ணல்,' காமம் 'வாய்ப்பறையறைந்து தூற்றி யிடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம காமம், ‘மெய்பெறா எழுத்துயிர்க்கும்
மழலை‘ குன்றிலிட்ட விளக்கு, ‘குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன’ சொல்வன்மை ‘நாவினுள் உலகம் நடக்கும்,' போர்வை, 'சிலம்பி வலந்ததுபோற போர்வை,’ கறவை 'கன்றொளித்தகல வைத்த கறவை,' நடைவல்லார், ‘பயங்கெழுபனுவல் நுண்ணூல் நடையுளார் சொல்லிற் றெல்லாம்’. கல்வி, ‘வாமனார் வடித்த நுண்ணூல் உண்டு வைத்தனையநீ' சிறிது ‘ஆலம் வித்தனையது,' வாய்மை, ‘தப்பில் வாய்மொழி,' நுண்பொருள், ‘நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள்,' உவமை, ‘ஒளிநல வுப்புக் குன்றம்
|