''ஆண்கடன் அகறல் அதுநோன்
றொழுகுதல் மாண்பொடு புணர்ந்த மாசறு
திருநுதல் கற்புடை மகளிர் கடன்எனக்
காட்டி வினைக்கும் பொருட்கும் நினைத்துநீத் துறையுதர் எல்லை கருதிய திதுவென
மெல்லியற் பணைத்தோள்
மகளிர்க்குப் பயிர்வன
போல மனைப்பூங் காவின் மருங்கிற்
கவினிய பைந்தார் முல்லை வெண்போது
நெகிழ'' (3 - 7 . 7-14)
வருகின்றது. தன்பெயர் கேட்ட அளவில்
நடுங்கும் மகளிர்க்கு நங்கையீர் ! பொறுத்தது பொறுத்தீர்! இன்னும் சிறிது
பொறுமின்; என் செய்வது! ஆடவர் கடன் வினை கருதியும் பொருள் கருதியும் நும்மைப்
பிரிதலே ஆயிற்று. பிரியாரேல் நும் இல்லறம் இனிது நடவாது கண்டீர்! ஆதலான்
''மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற் கற்புடையீராகிய நுங்கடன் அது (அப்
பிரிவுத் துன்பத்தை) நோன்றலே ஆயிற்று. ஆதலின் ஆற்றியிருமின்! நும்மை நீத்துரையுநர் மீண்டு வருவதாக நுமக்குக் கூறிய கால எல்லையும் இதுதான்''என்று
பிரிவுடன் அம் மாலைப்பொழுது தனது முல்லை நகைதோன்ற ஆறுதல் கூறி வருகின்றது, அம்
மாலைப் பொழுதிலே.
இனித் தாம் ஈட்டிய
பொருள் எல்லாம் வறியோர்க்கு தவிப் புகழும் புண்ணியமும் எய்தமாட்டாராய்த்
தமக்கும் ஓர் அந்திப் பொழுதுண்டு; அது அணித்தாய் வரும் என்பதனையும்
சிந்தியாமல்,
''வெறுக்கைச் செல்வம் வீசுதல்
ஆற்றாது மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர்
போல வாசம் அடக்கிய வாவிப்
பன்மலர் மாசில் ஓள்ளொளி மணிக்கண்
புதைப்பவும்
(ஷ. 15 - 58) இங்ஙனம் குவிந்த
மலர்களை நினைத்துப் பசியோடு வந்த மணி வண்டுகள்
தாம்,
''பெருமை பீடற நாடித்
தெருமந்து ஒக்கல் உறுதுயர் ஒப்புதல்
உள்ளிப் பக்கந் தீர்ந்த பரிசிலர்
உந்தவாச் செறுமுகச் செல்வரிற்
சேராது''
(ஷ. 19 - 22)
|